Mar 9, 2024

 By Engr. Kanthar Balanathan

DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey), C.Eng., MIEE,

Former Director of Power Engineering Solutions Pty Ltd, Consulting Electrical Engineers

Leading Engineer of the World 2006, UK, Authority Award

 

தலைவர்

நகரசபை கவுன்சில்லேர்ஸ்

அன்புடையீர்

வல்வை நகர சபையின் சிறந்த நிர்வாகம், முகாமைத்துவம், மக்களின் சிறந்த வாழ்க்கை முறையும்

கடந்த மாசியில் முற்றவெளி மைதானத்தில் நடந்த பாடல் மற்றும் நடன வைபவத்தில் அதனை ஒழுங்கு படுத்திய குழுவும் அதனை பார்க்க வந்த மக்களும் நடந்த முறை கேடுகளை இந்த கட்டுரையில் ஏழுதலாம் என்று ஆவல். இக்ககட்டுரைகளை இந்த இணையதளத்தில் பார்வையிடலாம்.

Ref:        Kanthar Balanathan's Blog (neuronmind.blogspot.com)

ஒழுங்கு முறைகள் சரியாக இல்லாததாலும் மக்களின் சீர்கேடான முறையாலும் அந்த வைபவம் வாழ்த்துவதாக அமையவில்லை.

வல்வையில் வருடத்திற்கு வருடம், பட்டத்திருவிழா, ஆலய வழிபாடுகள், தேர்த்திருவிழா, தீரத்த விழா இப்படி பல விழாக்கள் இருப்பது மக்களுக்கு தெரியும். இந்த விழாக்களில் மிகவும் பாரட்டததக்கது என்னவென்றால், ஒவ்வொரு விழாக்களிலும் மக்கள் நடந்து கொள்ளும் விதம் மிகவும், மிகவும் பாராட்டத்தக்கது. மக்களின் ஒழுங்கு முறைகள், வீதியில் நடந்து செல்லும் ஒழுங்குமுறை எல்லாம் பாராட்டத்தக்கது. இந்த வருடம் பட்டத்திருவிழாவில் ஒரு இசைக்கச்சேரியும் ஒழுங்கு படுத்தினார்கள். காவல் அதிகாரிகளுக்கு இங்கு வேலையே இருக்கவில்லை. ஏன், அவ்வளவு சிறந்த சட்ட ஒழுங்கு முறைளையும் சமூக ஒருங்கிணைப்பு முறைகளையும் மக்கள் கடைப்பிடித்தார்கள். மிகவும் வாழ்த்தக்கூடியது, வாழ்த்துகின்றோம். இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம்: வல்வை நகர சபையும், கவுன்சிலர்களும், தலைவரும்தான்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் (இன்று) வாழும் வல்வை மக்கள் மிகவும் சிறந்தவர்கள், சட்டம் அறிந்தவர்கள். படித்த மக்கள் அதிகம். என்பத்தி ஒரு அகவையில் யானும் ஓர் வல்வை மகன்தான். எமக்கு தெரிந்த சில அறிவாளிகள், திரு குட்டிமணி (A.S. Rajendra, T. Manivasagar etc)

நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுபாடு, இவற்றை பின் பற்றும் மக்கள் தான் வல்வை மக்கள். ஈழத் தமிழ் மக்களிடம் எமது கோரிக்கை என்னவென்றால்: தயவு செய்து வல்வை மக்களின் வாழ்க்கை முறையை பார்த்து பின்பற்றி வாழவும்.

இவை எல்லாவற்றிற்கும் ஆணிவேர் எங்கே உள்ளது? பிரபாகரன் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுபாடு, இவையோடு வாழ்ந்தவர். ஆனாலும் சில பிழைகள் விட்டார்.

 

வல்வை மக்கள் வாழ்க. செல்வமும் கல்வியும் செழித்தோங்குக.

 

இப்படிக்கு

அன்புடன்

 

கந்தர் பாலநாதன்

9-03-2024.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  12-04-2024 Engr. Kanthar Balanathan DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey), C.Eng., MIEE, Former Dire...