May 14, 2025

 14-5-2025

இன்றைய வடகிழக்கு அவலநிலை

 

இன்றய வட கிழக்கின் மக்கள் யார்? இவர்கள் தொழில் என்ன என்று கேட்டால் என்னவென்று சொல்வது. அரசியல்வாதிகள் தொகை அதிகம். அதிலும் அரை குறையும் அல்ல. ஐந்து விழுக்காடு அரசியல் தெரிந்த அரசியல்வாதிகள் தொகை சிறிது. இவர்கள் தொழில் என்ன? ஐந்து வருடம் பின்னே வரும் தேர்தலுக்கு வாக்கு சேர்பதற்கு மாலை போடு பத்திரிகையில் போட்டு புழுகுவது. வெளியில் எதிர்கட்சிகளைப்பற்றி வசை பாடுவது.

இந்த அரசியல்வாதிகளைச்சுற்றி பல அடியாட்கள், கொலைகார நிபுணர்கள், பரப்புரை செய்வதற்கு கூலிகள், இப்படி பல மக்கள். தங்களுடைய மக்களுக்கு என்ன சேவை செய்வது; இவர்களுக்கு தெரியாது. பதவி ஆசை, எப்படி பணம் சுருட்டலாம், எப்படி உறவினர்களுக்குச் சலுகை அளித்தல், காணி சுருட்டலாம், கொழும்பில் வீடு வாங்கலாம், இப்படி பல தீமை எண்ணங்கள்தான் தோன்றும்.

கடந்த தேர்தலில் 3௦௦ க்கும் மேல்பட்ட தெருநாய்கள் போல தேர்தலில் நின்றார்கள். ஒரு சில தேர்தலில் வவுனியாவில் ஒரு நாதாரி ஒருவன் தேர்தலில் நின்றான். இவன் எப்படியோ ஜே.பி. உத்தியோகம்  காக்கா பிடித்து பெற்றான். இவன் ஊர் வவுனியா அல்ல. இவனுடைய சரித்திரமே எமக்கு தெரியும். இவன் “ஓ” லெவெலே பாஸ் பண்ணவில்லை. இவன் அராலியை சேர்ந்தவன். பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றி வவுனியா என்று சொல்லி, அரசியல்வாதி என சொல்லி தேர்தலில் நின்றான். [https://www.facebook.com/baleswaran.ponnampalam.92] இப்படித்தான் தமிழ் துரோகிகள்  அரசியல்வாதிகள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள். இவனுடைய குலம், குடும்பம், ஒரு நாதாரி குடும்பம். சீ.. எனத்தோன்றுகின்றது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டலே இந்த ஈனப்பிறவிகள்.

இப்போ தமிழ் அரசியல்வாதிகள் என்பவர் தொழில் என்ன? எப்போ பாராளுமன்றத்திற்கு போகலாம் என்றுதானே. இவர்களுடைய கையாலாகாத எடுபிடிகள் என்ன செய்கின்றார்கள். போயா தினத்தன்று தையிட்டியில் காகம்போல வரிசையில் இருந்து கஞ்சி குடிப்பார்கள். போராட்டத்திற்கு ஒரு குழு, அடிபிடிக்கு ஒரு குழு இப்படி பல குழுக்கள். குழுக்கள் உலகளாவி உள்ளது. இப்போ கனடாவில் முல்லிவாய்கால் நினைவி தூபம் ஒன்று கட்டி எழுப்பி வணங்குகின்றார்கள். இந்த நினைவு தூபத்தில் தமிழ் மக்களுக்கு என்ன லாபம். ஆனந்தசங்கரிக்கு முளை கலக்கம் ஏற்பட்டுவிட்டது. மக்கள் மனதில் எப்படி, எப்போ நிம்மதியை கொண்டுவருவது. தகப்பன் எவ்வழி, பிள்ளைகள் அவ்வழி.

மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள் என்னத்தை கிளிக்கின்றார்கள். ஒரு முதலீடு? வருடம் 365 நாட்களும் எப்படி பதவிக்கு வரலாம் என்றுதானே? இவர்களோடு இவர்கள் கூட்டம் சோம்பேறிகளாக மாறுகின்றார்கள். இப்போ எல்லோரும் மாகாண சபைக்கு துள்ளுகின்றார்கள்.

Finally, Tamils in SL all want to be Politicians. Irrespective of knowledge, their IQ level, all want to be politicians. Incompetent nincompoops.

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

    Mid-Eastern Nations Treaty Organization. (MENTO) (Recommended) Kanthar Balanathan   For centuries, the Arab nations have been sl...