Sep 7, 2025

                 தமிழக இலங்கை சைவ/இந்து ஆலய நிர்வாகிகளுக்கு

ஒரு தமிழனின் வேண்டுகோள்.

கந்தர் பாலநாதன்

 

ஒரு சில வருடங்களுக்கு முன் நான் ஒரு கவிதை எழுதி இருந்தேன். இக்கவிதை பிராமணர்களை புண்படுத்துவதற்காகவோ அல்லது இழிவு படுத்துவதற்காகவோ இல்லை. பொது மக்களின் குறைகளை எடுத்துக்காட்டவே.

பிராமணர்கள் வாழ்க்கையில் சிறந்த முறையில் வாழ்கின்றார்கள். உண்மை பேசுபவர்கள். சுத்தமானவர்கள். கொலை, கொள்ளை, பெண் ஆசை, பொன் ஆசை, மண்ணாசை பிடிப்பு அற்றவர்கள். மக்களுக்கும் ஆண்டவனுக்கும் இடையில் இருந்து மக்களுக்காகவே ஆண்டவனோடு சமஸ்கிருதத்தில் மொழிவார்கள்.

ரத்தினம் திரைப்படத்தில் நடிகர் மகேந்திரன் கூறுவார்: தாம் ஆண்டவனுக்கு தீபா ஆராதனை காட்டும்பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது. ஆனால், அதே தட்டை கொண்டு ஐந்துக்கும் பத்துக்கும் தட்சணை கேட்கும்பொழுது மனம் சங்கலப்படுகின்றது. இது உண்மையிலும் உண்மை.

ஆனபடியால் நாம் ஆலய நிர்வாகிகளிடம் கேட்பது: ஒரு ஆலயம் பிரதிபலிப்பதென்றால் அது ஆலய ஆண்டவனால் அல்ல.அந்த பெருமை அங்கு ஆராதனை காட்டும் பிராமணர்களிடமே உள்ளது. பிராமணர்களால்தான் ஒரு ஆலயம் பெருமை கொள்கின்றது.   அப்படி என்றால், ஆராதனை செய்யும், (பூசை)  பிராமணர்களை ஏன் பெருமை படுத்தலாகாது.

உண்டியலில் மக்கள் போடும் பணம் யாருக்கு கொடுக்கின்றார்கள். ஒரு சில நாடுகளில் ஆலய நிர்வாகிகள் இப்பணத்தை ஆட்டையை போடுகின்றார்கள். தர்மத்தின் படி உண்டியலில் சேரும் பணத்தில் ஒரு போதிய விழிக்காடு இப்பிராமனர்களுக்குதான் போய் சேரவேண்டும். ஆராதனை செய்யும் பிராமணர்களுக்கு செழிப்பான வருமானத்திற்கு நல்ல சம்பளம் கொடுக்கவேண்டும். பிராமணர்கள் செய்யும் இத்தொழிலை வேறு யாராவது செய்ய முடியுமா? இல்லையே. ஆனபடியால் தமிழக ஆலய நிர்வாகிகளும், எங்கெல்லாம் சைவ/இந்து ஆலய வழிபாடுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் இப்பிராமனர்களை செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கு போதிய அளவு ஊதியம் கொடுக்க வேண்டும்.  பிராமணர்களை செழிப்பான வாழ்க்கை வாழ வழி செய்யுங்கள்.

பிராமணர்களும் தீபாராதனை செய்யும் தட்டில் மக்களிடம் தட்சணை கேட்க கூடாது. அவர்கள் செய்யும் செழிப்பான, தூய, புனிதமான இத்தொழிலுக்கு சிறப்பான ஊதியம் ஆலய நிர்வாகிகள் கொடுக்கவேண்டும். இல்லையெனில் மக்களே பாவம் செய்கின்றார்கள் என்று உலகம் கூறும். ஆலயத்தில் வழிபாடுகள் செய்யும் மக்களே நீங்களே சிந்தியுங்கள்.

மற்றைய மத குருக்களையும் ஒப்பிட்டு சிந்தியுங்கள். இல்லையேல் மற்ற மதத்தோடு ஒப்பிடும்பொழுது மக்கள் பிராமணர்களை அடக்கி/ஒடுக்கி வாழ்கின்றார்கள் என்று தோன்றும்.  

வாழ்க பிராமணர்கள்.

7-09-2025

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

                  தமிழக இலங்கை சைவ/இந்து ஆலய நிர்வாகிகளுக்கு ஒரு தமிழனின் வேண்டுகோள். கந்தர் பாலநாதன்   ஒரு சில வருடங்களுக்கு முன் ந...