31st March 2015
வட மாகாணசபை
No 26, சோமசுந்தரம் தெரு ,
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்
இலங்கை .
அன்புடையீர்,
வட மாகாண சபையெனும் நாடகமன்றத்தின் பித்தலாட்டங்களும் , ஒத்திகை நகைப்பு நாடகங்களும்
வட மாகாணசபை முதல்வருக்கு பல மடல்கள் எழுதியும் செகிடன் காதில் ஊதிய சங்குபோல பிரயோசனமில்லாமல், நேரம் வீணாகி மக்கள்தான் அழிந்து போகின்றார்கள். நான் இலங்கையை விட்டு வெளியேறி 41 வருடங்களாகின்றது. இன்றும் எனது தமிழை மறக்கவில்லை. வாழையடி வாழையாக, இந்து குலத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழன்.
“சிந்தையைத் திருத்துவது சமயம்,
செயலைத்திருத்திவது சட்டம்”.
சமயத்தை பின்பற்றி ஆண்டவனை வழிபடுகின்றவர்கள் சிந்தையைத் திருத்துவதும் இல்லை, சட்டம் இருந்தும், சட்ட ஒழுங்குமுறைகளை யாரும் கவனிப்பதும் இல்லை, மதிப்பதும் இல்லை. கேட்டால், யானறியேன் பராபரமே என்பார்கள்.
ஆனால் இன்று என்ன நடக்கின்றது? நாசகாரியங்களைச் செய்யுமுன்பு நேற்றியில் பட்டையை அடித்து, நெற்றிக்கண்ணடியில் பெரியதொரு பொட்டு வைத்து, ஆலயத்திக்கு செல்லுமுன் இவ்வாக்கியத்தை மனதுக்குள் உச்சரித்து, அதாவது; “குருப் பிரம்மா”, என்றதும், ஆண்டவா, நான் நாளைக்கு அவனை அழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, எனக்கு வெற்றியை கொடு என்பதே. இதைத்தான் கள்ளக்கடத்தல் மன்னர்களும் ஆலயத்தில் வேண்டுவது, எம் அரசியல்வாதிகளும் வேண்டுவது அல்லவா? என்னே நாடகம்! அதோடு “சட்டம்” என்பது ஒரு இருட்டறை அல்லவா? அரசியல்வாதிகளை சட்டத்தால் ஏதேனும் செய்ய முடியுமா?
வட மாகாண சபையின் நாடக ஒத்திகைகளை புலம் பெயர்ந்த மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாம் உலக அரசியலையும், அதில் பங்கெடுக்கும் அங்கத்தவர்கள் தரத்தை அளவீடு செய்யுமிடத்து கிடைக்கும் விடை என்ன? சாக்கடை தரம் அல்லவா? தரம் கேட்ட நாடகக் கும்பல் என்றும் இருக்கலாமா?
அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தொழில் வரியறை என்பது இல்லை. ஒரு சிலர் சட்டத்தரணிகள். அதிகமானோர் படிப்பறிவு அற்றவர்கள். சரி, செயற்முறை மதிநுட்பமோ, ஞானமோ, பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலோ, அறிவுகூர்மையோ, உண்டா? ஒன்றில், சுத்த சூனியம் இல்லையேல், நெகுதி (negative) முறை செயல்படுதல்தான் காணக் கூடியதாக இருக்கின்றது.
இன்று, வட மாகாணசபை எப்படி செயல் படுகின்றது? இதன் அங்கத்தவர்கள் யார்? எந்தப் புற்றில் இருந்து ஊர்ந்து வந்தார்கள்? ஒரு சிலர் படித்திருந்தும் பகுத்தறிவற்றவர்கள் போல அல்லவா செயல்படுகின்றார்கள். பணமும் விளம்பரமும்தான் முக்கியம்.
தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், ஒரு நாடு வேணுமென்று, மூடத்தனமாக, ஆய்வோ, ஆராச்சியோ செய்யாமல், தமிழ் நாட்டு மூடர்கள் சொற்கேட்டு, பயங்கரவாத போர் தொடுத்தான், மூட்டாள் வேலுப்பிள்ளை பிரபாகரன். இப்போரில் பல ஆயிரம், ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள், தம் உயிரை தியாகம் செய்தார்கள். பலர், ஓடி ஒளித்தார்கள்.
“விதைத்தவர்கள், களை எடுத்தவர்கள், மாண்டவர்கள், யாரோ, ஆனால் இன்று பழங்களை உண்பவர்கள் வேறு யாரோ!”
சரி, இனி வட மாகாணசபையின் குதர்கங்களையும் அடாவடித் தனங்களையும் ஆராய்வோம்.
ஒரு ஊடகத்தின் பார்வை:-
“வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை கந்தசாமி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்”.
இதன் அறிக்கை வட மாகாண சபை சுகாதார மந்திரிக்கு என்னால் ஒரு மடல் எழுதப்பட்டது. இதற்கு ஒரு அறிக்கையும் விடப்படவில்லை. மாகாண சபை முதல்வரோ, மந்திரியோ, என்றால், கடவுள் அல்ல. மக்களின் சேவகர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பொது மக்களின் வேலையாள்.
ஆனால் வ.மா.சபை முதல்வலர் / மந்திரிகள் ஆசை என்ன? பகட்டு, விளம்பரம், மாலை அணிதல், கழிவறைகளைக் கட்டினாலும், அதன் திறப்பு விழாவை மாலை அணிந்து திறக்க ஆசைப்படுதல், தானே ராஜா என்ற உயர்வு மனப்பான்மை, இப்படி பலதரப்பட்ட குறைபாடுகள் இவர்களோடு ஒட்டி உள்ளன. இவர்கள் அகமுக நோக்கு குணாதியம் உள்ளவர்களா? அதாவது தன் உள்ளத்தைத் தன் பால் திருப்பி ஆய்வு செய்பவரா? (INTROVERT)அல்லது. பிறரிடம் சகஜமாகப் பழகுபவர்களா? (EXTROVERT). இவர்களுக்கு Leonardo da Vinci என்பவரைப்பற்றி எவ்வளவு தெரியும்? Leonardo da Vinci யின் திறமை என்ன? இவர்களுடைய ஊடகத்துறையின் அறிவுத்தளம் என்ன அளவு? இவர்கள் ஊடகத்துறையின் லட்சியங்கள், கொள்கைகளை கடைப்பிடிப்பவர்களா? ஜனநாயகம்; இதன் தத்துவம், லட்சியங்கள், என்னவென்று தெரிந்தவர்களா? இவர்களுடைய அடிப்படைத்தொழில் என்ன?
ஆனால் பாராட்டக்கூடியது என்ன? உதாரணம்: சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அடைக்கலநாதன். மாவை, இவர்கள் மாலைக்கு அங்கலாய்ப்பதை யாராவது பார்த்தீர்களா? இல்லையே! இவர்கள்தான் மக்களுக்காக வாழும் இன்றைய அரசியல்வாதிகள் போல தெரிகின்றது.
இப்படிப்பட்ட திறப்பு விழாக்களுக்கு செலவாகும் பணத்தொகை எவ்வளவு? இந்நிதிகளை மக்களுக்காக செலவழிக்கலாம் அல்லவா? வீண் பகட்டுச் செலவுகள் எதற்கு? ஒவ்வொரு மாலை என்ன விலை? முதல்வரும், அவரது சகாக்களாகிய நான்கு மந்திரிகளும், யானையைப்பார்க்க சென்ற, நால்வரைப்போல அல்லவா? அதாவது, செகிடன், குருடன், ஊமை, முடவன்?
அண்மையில், இலங்கை அரசாங்கம் 20 பேரூந்துகளை வட மாகாணத்திற்கு அளித்திருந்தது. முதல் பேரூந்தை முதல்வர் ஓட்டினார். இப்படிப்பட்ட செயல் இவரது கடமையா, பொறுப்பா? சிறு பிள்ளைத்தனமாக உள்ளது.
இப்படத்தை எடுத்தவரை சரவணபவான் (???) கோபத்தோடு பார்க்கின்றார் போல தோன்றுகின்றது. முதல்வருக்கும் பிடிக்கவில்லை???? இதுதான் இவர்கள் அடாவடித்தனமா? ஊடக சுதந்திரம் என்பது இவர்களுக்கு தெரியாதா? மாலைகளுக்கு அங்கலாய்க்கும் பித்தர்களை போலல்லவா தோன்றுகின்றது.
யாழ் பேரூந்து நிலைய கழிவறைகள் நிரம்பி வழிகின்றது என்று படித்தோம். எல்லாவற்றிற்கும் முதல்வரல்லவா பொறுப்பு. வேலையை வேறு யாராவது செய்தாலும், பொறுப்பு, முதல்வருடையதுதான். (Being a CM, the CM should know the responsibilities. Whatever happens, the CM is finally responsible)
சுன்னாக நல்ல தண்ணிக் கிணறுகளில் எண்ணை கலந்து அசுத்தமாக்கப் பட்டிருக்கின்றது. இதைப்பற்றி, முதல்வர் ஏதாவது ஒரு அறிக்கை விட்டாரா? பட்டை அடித்து, பொட்டு வைத்து, குரு பிரம்மா கூறி, மாலை அணிந்து திறப்பு விழாக்கள் நடத்துவதற்குத்தான் எமக்கு ஒரு மாகாண முதல்வர் தேவையா? சிரிக்கத்தான் வேண்டும்.
நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, எங்கே? இவை என்னவென்று தெரியுமா?
சிறு பிள்ளை வேளாண்மை வீட்டிற்கு வராது என்பார்கள். எமது மாகாண சபையைப் பொறுத்த வரையில் இக்கூற்று உண்மைபோல அல்லவா உள்ளது ?
“சட்டியில் இருந்தாற்றான் அகப்பையில் வரும்” - கூற்று
காணாமல் போனோரைப் பற்றி கூக்குரல் இடுகின்றீர்களே, உண்மையில் அரசியல்வாதிகள் உறவுகளைக் காணவில்லையா? சாதி குறைந்த இளைஜர்களும், யுவதிக்களும்தானே தங்கள் உயிரை மாய்த்தார்கள்? இல்லையேல் இக்காரணத்தை வைத்து அரசியல் லாபம் தேடுகின்றீர்களா? அதாவது அடுத்த தேர்தலுக்கு வாக்குகள்?
“ஆடு நனைகின்றதென்று ஓநாய்கள் அழுததாம்” - கூற்று
ஒரு சில ஆய்வுகள்:
1. “NPC spent Rs 8.87M to refurbish schools
The Northern Provincial Council (NPC) spent Rs 8.87 million for the refurbishment of school buildings, for President Mahinda Rajapaksa's visit to Jaffna. Northern Minister of Education Thambirasa Kurukularasa said that the specific amount was spent for refurbishing school buildings, reconstructing inner roads and for colour washing”.
இதற்குரிய ஒப்பந்தக்கார புற தொழிலாளர்கள் யார், செலவுக்கனக்குகள்? Under the right to public information can you make these information open to the public?
2. New vehicles to NPC Chairman and Ministers
இவ்வாகனங்களில் அம்பன், குடத்தனை, அராலி, வட்டு, பன்னாலை, கரையூர், பாசையூர், சங்கானை, சித்தங்கேணி, இந்த கிராமங்களுக்கு சென்றீர்களா? இல்லையேல் பாகுபாடா? நல்ல சாதி இடங்களுக்குத் தான் செல்வீர்களா?
3. “NPC squandered allocations on luxuries”. He said that in accordance with the Sri Lankan constitution, the Provincial Councils have legislative power over a variety of matters including agriculture, education, health, housing, local government, planning, road transport and social services. The PC under the TNA did not perform what they were expected to do. They should have shown more concern for improvement because their inability is a hindrance for the development of the Northern Province, he said - See more at: http://www.dailynews.lk/?q=political/npc-squandered-allocations-luxuries#sthash.QPFuT8ST.dpuf
இதற்கு என்ன சாக்குப் போக்குச் சொல்வீர்கள்?
4. “TNA councillors accuse Wigneswaran of indifference and incompetence “.A year after the first-ever Northern Provincial Council (NPC) was elected, members of the Council are expressing deep dissatisfaction with its functioning and utter disappointment with the performance of its celebrated Chief Minister C.V. Wigneswaran and his four-man Board of Ministers. “Sunday Leader”.
5. One-time Supreme Court judge and first Chief Minister of the Northern Provincial Council (NPC) C.V. Wigneswaran, on Feb. 10, 2015, tabled a resolution alleging genocide of Sri Lankan Tamils, since 1948.
இத்தனை காலம் கடந்து, தூக்கத்தால் எழுந்து, மாசி பத்தில், இனப்படுகொலை எனும் குற்றச்சாட்டை வட மாகாண சபையில் நிறை வெற்றி இருக்கின்றீர்கள். என்னே நாடகம் முதல்வரே? என்ன அரசியல் நாடகமா? இல்லை குப்பத்து / சேரி நாடகமா?
6. இரணைமடு விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் றோமை சேர்ந்த அமைப்பொன்றால் சர்வதேச விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 3450 மில்லியன் நிதியினில் இதுவரை 1200 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செலவு செய்யப்பட்ட நிதியினில் சுமார் 300 மில்லியன் வரை மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. - See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=36641&cat=nnews&sel=current&subcat=14%20fraud%20in%20agriculture%20ministry#sthash.atvH8gkz.dpuf
இதற்கு என்ன உளறல் நாடகத் திட்டம்?
7. மாந்தை கிழக்கு பிரதேசசபையின் ஆளும் கட்சியான ரீ.என்.ஏயின் உறுப்பினரான கொல்லவிளாங்குளம் வவுனிக்குளத்தைச் சேர்ந்த சோதிராசா ஜெயசுதன் ஏராளமான பெண்களை பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி அதனை வீடியோக்களாக எடுத்து வைத்திருந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது. - See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=36666&cat=nnews&sel=current&subcat=14#sthash.ZfeuwNWz.dpuf
இதற்கு காவல் அதிகாரம் தேவை இல்லை. தமிழருடைய இயல்பு நிலையே இதுதான். போதாது என்று, இவர் தமிழ் தேசியக் கூட்டமைபின் அங்கத்தவர்? இப்படியான கேவல நடத்தை உள்ளவர்களை எதற்காக அரசியலில் ஈடு படுத்துகின்றீர்கள். ஏன்? இவன் வேளாளன் என்றா? சமஉரிமை கேட்கும் நீர், எதற்கு இப்படிப்பட்ட நாய்களை அரசியலில் ஆட விடுகிறீர்?
8. மகிந்த சென்ற பின் நின்மதியாம்..! வட மாகாண சுகாதார அமைச்சர்.
இது இவர் உளறல்.
9. 128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. வடமாகாண இணையத்தளத்தில் கணக்கறிக்கை வெளியானதையிட்டு தனக்கு எதுவும் தெரியாதென்று கூறி வடமாகாண முதலமைச்சர், கணக்கறிக்கையில் ஏன் திரபுபடுத்திய கணக்கு வந்தது என்பதற்கு தன்னால் பதில் கூற முடியாதென்றும்; தெரிவித்துவிட்டார். - See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=36748&cat=nnews&sel=current&subcat=14#sthash.WdF5m2tz.dpuf
இது உமது நரி உளறல்?
10. சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்களை துரிதப்படுத்துவதற்கு வடமாகாண சபை முதலமைச்சருக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக, யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் தலைவர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சனிக்கிழமை (28) தெரிவித்தார் இது தொடர்பாக அவர் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். - See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=36745&cat=nnews&sel=current&subcat=14#sthash.PofDeR3i.dpuf
இதில் நீரும், உமது சுகாதார மந்திரியும் கடமையிலிருந்து தவறி விட்டீர்கள்.
11. இதனிடையே சண்டிலிப்பாய் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் தனித்தனியாக நல்ல நீர் வழங்குவற்கான நீர்த்தாங்கிகள் மற்றும் நீர்ப்பரிசோதனைகளுக்கான வசதிகள் கேட்டு மாகாண கல்வி அமைச்சிற்குக் கடிதங்கள் அனுப்பியதாக தெரியவருகின்றது. இதனால் கொதிப்படைந்த மாகாண கல்வி அமைச்சர் திரு. குருகுலராஜா அவர்கள் மிகவும் கொதிப்படைந்து வைத்தியர்களின் பிரச்சாரத்தை நம்ப முடியாது எனக் கூறி நீர்த்தாங்கிகள் கேட்டவர்களைப் விரட்டியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இது குருகுலராஜாவின் அடாவடித்தனம்.
12. P Ayngaranesan scolds Vijay fans who protested outside Uthayan Newspaper office 22Jan2014. iஇந்த இனைய தளத்தில் பார்வை இடவும். https://www.youtube.com/watch?v=5qRX8U2pRag
இந்த மனிதன் அடாவடித்தனத்தை கையிலேந்தி , “ஐயக், ஐக், என்று குளறி , ஊடக சுதந்திரத்தை நாறடிப்பதை பாரும். ஊடக சுதந்திரம் என்று தமிழ் அரசியல்வாதிகள் கூக்குரல் இட்டதாக எமக்கு ஒரு ஜாபகம். மனைவி, பிள்ளைகளை தமிழ் நாட்டில் விட்டு, யாழில் இவர் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் படுத்துவது, தேசப்பற்றா, இல்லை நாட்டுப்பற்றா? இப்படிப்பட்ட, துஷ்டர், மூடர்களை அரசியலில் ஈடுபடுத்துவது, TNA, குற்றம், அதோடு, வாக்களித்தது, மந்தைக்கூட்டம் குற்றம்.
13. இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடத்தின் கழிவு, சுமார் 15 நாட்களாக அகற்றப்படாததைக் கண்டித்து பஸ் நடத்துநர்களும் சாரதிகளும் புதன்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் செய்தனர்.
- See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=37008&cat=nnews&sel=current&subcat=14#sthash.KjzQbvyM.dpuf
இதற்கும் முதல்வர் என்ற பதவியில் நீர் தான் பொறுப்பு?
14. ஆனால் இப்போது கம்பவாரிதி ஜெயராஜுக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் கொழுவல் ஏற்பட்டு விட்டது. கம்பவாரிதிக்கு வாய்க் கொழுப்பு அதிகம் என்று மொட்டையாக சொல்லி மழுப்புகின்றார் முதலமைச்சர். இருப்பினும் யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்ற நிலைதான் கம்பவாரிதிக்கு ஏற்பட்டு உள்ளது.
“நாங்கள் எழுதிக் கொடுக்கின்றவற்றைத்தான் கம்பன் விழாவில் வாசித்து வந்தவர் விக்னேஸ்வரன் ஐயா. எழுதிக் கொடுக்கப்படுகின்றவற்றைத்தான் இப்போதும் முதலமைச்சராக வாசிக்கின்றார். இவருக்கு எப்போதுமே சுய புத்தி இருந்தது இல்லை.”
See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=37013&cat=nnews&sel=current&subcat=14#sthash.Cy6G4ELp.dpuf
எழுதிகொடுப்பதை வாசிக்கும் உமக்கு சுய புத்தி இருக்குமா என்பது நியாயமான கேள்வி?
15. அமைச்சராக வருகின்றமைக்கு முன்பு குருகுலராசா கல்வி அதிகாரியாக பணியாற்றினார். அப்போது மன்மதராசா என்று இரகசியமாக அழைக்கப்பட்டு இருக்கின்றார். இவர் கல்வி அமைச்சர் என்கிற வகையில் பாடசாலை நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் பிரதம விருந்தினராக இப்போது அழைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார். ஆனால் இவருடன் கூடவே இவ்வைபவங்களில் தவறாமல் பங்கெடுப்பார் என்று அடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றார் இவரின் மனைவி. - See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=36968&cat=nnews&sel=current&subcat=16#sthash.Hg9ZowKP.dpuf
தமிழனுக்கு மானம், வெட்கம், ரோஷம், ஏதாவது உள்ளதா? சீ வெட்கம் கெட்ட பிழைப்பு.
“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”
16. தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை. பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு என்று சிங்கள ஆட்சியாளர்கள் முன் நிலையிலேயே வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளமை பெரும் சலசலப்பை தோற்றுவித்துள்ளது. எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது.
என்ன, அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமா? நீரோ கொழும்பில் வாழ்ந்தவர். உமக்கு அம்பன், குடத்தனை எங்கே இருக்கின்று தெரியாது. உம்மிடம் எதனைப் பறித்தார்கள். உளறலை விட்டு, மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய எண்ணினால், செய்யும். If not please shut up and get out of the NPC, because you may be not fit to be the CM. People vote of their mind set of “Tamil Elam and Tamil Power, like cattle herd. “ஆடத்தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்“
17. யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகள் கொட்டுவதற்கு 3 மாதங்களும் மலக்கழிவுகள் கொட்டுவதற்கு 1 வாரமும் கால அவகாசம் வழங்குவதற்கு அப்பகுதி மக்களை ஒன்றிணைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. - See more at: http://newjaffna.co/moreartical.php?newsid=36460&cat=nnews&sel=current&subcat=14#sthash.jhgx7u6L.dpuf
இதுதான் ஒரு சுற்றுச்சூழல் மந்திரியின் கடமையா? இவர் ஊழல் மந்திரியா? இல்லை, சுற்றுச்சூழல் மந்திரியா? அதிகார துஷ்பிரயோகத்தால், யாழை ஒரு குப்பை கூடமாக்கி விடுவீர்கள். “குரங்கின் கைப் பூமாலைபோல”.
கடந்த கால தமிழர் அரசியல்
செல்வநாயகம் எனும் ஒரு கோமாளி மலேசியா அரசியல்வாதி, தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்று, “தமிழ் அரசுக் கட்சி” என்று ஒரு இனத் துவேஷக் கட்சியை ஸ்தாபித்து, மக்களை ஏமாற்றி, தங்களுடைய அரசியல் வாழ்க்கையை தாக்குப்பிடிப்பதற்க்காக, பொய் பிரசாரங்களை செய்து, வாழ்க்கையை எல்லா அரசியல்வாதிகள் ஓட்டினார்கள். சம உரிமை, கொடுங்கோன்மை, பாரபட்சம், வேறுபாடு காணுதல், ஒடுக்குமுறை, அடக்குமுறை, இப்படி எல்லாம் பொய் பிரசாரம். இன்று UN வரைக்கும் தமிழ் மக்கள் கூக்குரல் இட்ட வரை?
புலிகள் காணிகளை அபகரித்த பொழுது, தமிழர் குரல் எங்கே அடங்கியது. வன்னியை ஆக்கிரமித்தபொழுது சபை அங்கத்தவர்கள் எந்தப் புற்றில் ஒளித்திருந்திர்கள்? இளம் பிள்ளைகளை கடத்தியபொழுது, ஆபரணங்களை அபகரித்தபொழுது, தமிழ் மக்களை கொன்ற பொழுது, அரசியல் வாதிகளை கொன்ற பொழுது, இப்படி பல அக்கிரமங்களை புலிகள் செய்த பொழுது, நீங்கள் எல்லோரும் எந்தப் புற்றில் ஒளித்திருந்தீர்கள்?
சம உரிமை கேட்கிறியள். ஆப்பிரிக்கனைப்போல, மலேசியனைப்போல, பிலிப்பின் நாட்டானைப்போல, டோங்கனைபோல உள்ள சில தமிழ் அரசியல்வாதிகள், தாங்கள் வேளாளர் என்று கூறி மற்றவனை அடக்கி வாழ்கின்றீர்களே:- தாழ்ந்த குலம், சீவல் தொழிலாளி, ஆழ்கடலில் சென்று மீனைப் பிடித்து உங்கள் வயிற்றை நிரப்புகின்றார்களே, இவர்களுக்கு சம உரிமை கொடுக்கத் தயாரா? மேடை போட்டு, அதில் ஏறி தமிழ் மக்கள் எல்லோருக்கும் சம உரிமை கொடுப்போம் என்று அறை கூவத்தயாரா? நடிப்பை விட்டு, நிதர்சன, யதார்த்த நிலைக்கு வரவும். தமிழ் அரசியல்வாத மிருகங்களின் நடிப்பு மக்களுக்கு இன்னும் தேவை இல்லை. உண்மை நிலைக்கு வாருங்கள்.
I bet, most Tamil politicians do not understand the principles of “Democracy”. They consider “Democracy” as 50 against 49, which is rubbish. Get enlightened.
சபை முதல்வர், ஒரு தாழ்ந்த குல மக்கள் எனும் உண்மைத் தமிழனோடு அளவளாவி இருப்பாரா? தாடி வளர்த்தால், ரவீந்திரநாத் தாகூராகிவிடமுடியாது. பட்டை அடித்து, பொட்டு வைத்தால், இந்து குருக்கள் ஆகி விட முடியாது. தமிழ் பேசினால் சுத்த தமிழனாகி விட முடியாது. காந்தி, நேரு, பெரியார், அண்ணா, காமராஜர், இவர்கள் காலில் உள்ள தூசிக்கு கூட இலங்கையில் உள்ள ஒரு தமிழ் அரசியல்வாதியையும் ஒப்பிட முடியாது.
முதலில், உதாரணத்திற்கு, தமிழன் சமஉரிமை, சமதத்துவம், நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவற்றைப் பேணி வாழக் கற்று கொள்ள வேண்டும்.
“சேற்றில் காலை வைத்தால்தான்
தமிழன் சோற்றில் கையை வைக்க முடியும்”
அதேபோல:
“துடுப்பில் கையை வைத்தால்தான்
தமிழன் சோற்றில் கையை வைக்க முடியும்”
மேலோர், தாழ்ந்தோர், என்று கூறி தமிழனும், அரசியலுக்கு வருவது, பணத்தை கொள்ளை அடிப்பதற்கு என்று நிரூபித்தாகிவிட்டது. என்றுதான் மக்களுக்காக அரசியல் நடத்துவீர்கள், உண்மை, நேர்மை அரசியல்வாதிகளாவீர்கள்.
இறுதிச் சுருக்கம்
தமிழ் மக்கள் 67 வருடங்கள் “மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி இருக்கின்றார்கள்.” காலம் கடக்கு முன் தமிழரசுக்கட்சி எனும் கடையை மூடி விட்டு, உண்மை அரசியலை நடத்துமாறு கோரப்படுகிறது.
தமிழ் மக்கள் உண்மை, நேர்மையான தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்து, அரசியல் நடத்தவேண்டும்.
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”
சபையின் ஒவ்வொரு அணுகு முறைகளையும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அடுத்த மடல் ஐக்கிய நாடு சபைக்கும், UNHRCம் எழுதப்படும்.
நாடகம், நடிப்பு, ஓநாய் அழுதல், திருட்டு, கொள்ளை, காம உன்மத்தம், பாலியல் பைத்தியம், சுற்றாடல்களை மதிக்காத, முரட்டுத்தனம் உள்ளவர்கள், ஜனநாயகம் என்பது அறியாதவர்கள், இப்படிப்பட்ட, நாதாரிகளை விட்டு, நல்ல நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்து எடுத்து, மக்களுக்காக வாழுங்கள்.
“படிப்பது தேவாரம்
இடிப்பது சிவன் கோவில்”
இப்படிப்பட்ட கொள்கை உள்ளவர்கள் நாட்டுக்கு தேவை இல்லை.
நன்றி
இப்படிக்கு
................................................
கந்தர் பாலநாதன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.