Dec 27, 2024

 27-12-2024

 

பிரபாகரன் செய்த தவறுகள்

சாண்டில்யன்.

அனுசேரா (NAM) மகாநாட்டின் பின் ராஜீவ் காந்தி ஒரு முடிவுக்கு வந்து பிரபாகரனை அழைத்து பேசியபோது பிரபாகரன் தானும் ஒரு நாட்டின் பிரதம மந்திரி போல ராஜீவ் காந்தியோடு வாதாடினாராம். இதே நேரத்தில் ஒரு காட்டுப்பன்றி துரோகி சூளை மேட்டில் ஒரு ஆதிவாசியை சுட்டுக்கொன்றானாம். இதில் கொதிப்படைந்த ரஜிவ் காந்தி தமிழ் இயக்கம் எல்லாம் நாட்டை விட்டு  வெளி ஏறவேண்டுமேன்று  உத்தரவு போட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் எல்லா இயக்கமும் இலங்கை சென்று அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கினார்கள். புலிகளும் பாலகுமாறும் தனித்து இயன்கினார்கள்.

இதில் உண்மை என்ன?இலங்கை அரசாங்கம் அந்த காட்டுப்பன்றி ஆதிவாசியை அப்படி கொன்றால் தாங்கள் அவரை வரவேற்போம் என்று கூறினார்கலாம்.  

இத்தனை துரோகிகளும் அரசாங்கத்தோடு இயங்கினால், இப்போ எதற்கு சுய நிர்ணய உரிமை? இந்த காட்டுப்பன்றி துரோகியை தமிழ் மக்கள் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

பிரபாகரன் செய்த பிழைகள்.

1.  யாழ் மாநகர சபை மேயரை (துரையாப்பா) கொன்றது. இந்த வாகனத்தை ஒட்டியது யாரென்று எமக்கு தெரியும்.

2.ஒரு பொறிஇயலாளரை கொலை செய்ய திட்டமிட்டது.

3.  ஓட்டுமட கிராம சகோதர இஸ்லாமிய மக்களை அந்த கிராமத்தில் இருந்து விரட்டியது. இதன் பிரதிபலன் தமிழ் மக்கள் முள்ளிவாய்காலில் 2009  வதைபட்டது. பிரபாகரனின் உடல் நந்திக்கடலில் மிதந்தது.

4. அதிக தமிழரை கொன்றது. அமிர்தலிங்கத்தை கொன்றது. இதற்குப் பதிலாக மாவை சேனாதிராஜாவை அரசியலிலிருநது விலக்கியிருக்கலாம்.

5. மாத்தையாவை கொன்றது.

6. பல தமிழரை பணம் சேகரித்து களவாட செய்தது. இதற்கு கஸ்ரோவும் உடந்தை.

7.  இப்படி பல மோசமான செய்கைகள்.

8.  இராணுவ மூலோபாய திட்டம் இல்லாமல் செயலாற்றியது.

9.   இலங்கை ராணுவத்தின் பலத்தை அறியாது இயங்கியது.

10.       குட்டிமணி தங்கத்துரையை மறைமுகமாக காட்டிகொடுத்தது.

11. பால்ராஜை கொன்றது.

12. இன்றும் துவாரகா, பிரபாகரன் மனைவி உயிருடன் இருப்பதாக சொல்லி பணம் சேகரிப்பது.

13. IPKF ராஜீவ் காந்தி அனுப்பியபொழுது ஒரு சில காரணங்களுக்காக அனுப்பிஇருந்தார். இது பிரபாகரனுக்கு விளங்கவில்லை. பிரேமதாசவுக்கு விளங்கியது. பிரேமதாச பிரபாகரனுக்கு ஆயுதங்கள் கொடுத்து IPKF ஐ விரட்டி அக்கசொல்லி அதில் தோற்றோம்.

இப்படி பல, பல மூடசெயல்கள்.

கடந்த சில நாட்களில் ரோகிங்கியா அகதிகள் முல்லைத்தீவில் வந்தபோது ஒரு சிலர், புலிகள் இருந்தால் சிறந்த உதவிகளை செய்திருப்பார்கள் என்றார்கள். இது ஒரு கபட நாடக வார்த்தைகள். ஓட்டுமடத்தில் இஸ்லாமியர்களை விரட்டியோயபோது அந்த பாவம் பிரபாகரனை நந்திக்கடலில் மிதக்க செய்தது. பாவத்தின் பிரதி பலன்களை அனுபவிக்க வேண்டும். இதுதான் தர்மத்தின் நியதி.

புலிகளின் பெயரை சொல்லி எத்தனை பேர் கோடீஸ்வரராயிருக்கின்றார்கள்.

இப்பொழுது துவாரகா என்றொரு பெண் பணம் சேகரிப்பதற்கு உதவி. தமிழ் மக்கள் விடுதலை அல்ல, பணம் சேர்ப்பதுதான் இவர்கள் கொள்கை. ஒரு சில ஊடகங்களும் இதற்கு உதவி போகின்றன. மக்கள் பார்வையில் ஒரு சில தமிழ் புலம் பெயர் மக்கள் பணத்தில்தான் குறிக்கோள். மற்றவை எல்லாம் நடிப்பு. நீயு சீலாந்தில் மோரிமக்கள் பாராளுமன்றத்தில் ஹக்க பாடுகின்றார்கள். இது போரில் பாடுவது. எமது பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் தேவாரம்;”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்..” என்னே அறிவின்மை. இப்பொழுதும் ஸ்ரீதரன் நடிப்பில்தான் அரசியல் வகுக்கின்றார். இவர் ஒரு சிலருக்கு எத்தனை பார் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்தார்? கொடுத்திருந்தால்.

இன்றைய அரசியலில் மக்களுக்கு நிம்மதியைக்கொடுக்கும் நிலை இருக்கின்றது. அதை கெடுக்கவேண்டாம். ஒரு சில ஊடகவியலாளர் எதர் தரப்பிற்கு வேலை செய்வதுபோல தெரிகின்றது.

தய்டவு செய்து மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

 

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  5-1-2025 Harry 47, Cromwell Drive Rowville   Hi Harry We are starting the new year 2025. However, I regret to inform you that ...