Nov 15, 2023

  

 Engr. Kanthar Balanathan

DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey), C.Eng., MIEE, 

Former Director of Power Engineering Solutions Pty Ltd, Consulting Electrical Engineers

Leading Engineer of the World 2006, UK Authority Award

                                                                                                             15-11-2023


 

தலைவர்

வல்வை நகர சபை

வல்வை

 

அன்புடையீர்,

 

௧.   வல்வை சுலக்ஸ் + பிச்சுமணி

YouTube ல் இவ்விருவருடைய அத்தியாயங்களை பார்த்தேன். மிகவும் அற்புதப்படைப்பு. கவுண்டமணி, நாகேஷ் போல இவ்விருவரும் நடிக்கின்றார்கள். இவர்களது கலைத் திறமையை காட்டுகின்றது. அதோடு இவர்களால் நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்கின்றார்கள். வெளிநாட்டு வருமானம் வருகின்றது. இவைதான் மக்களுக்கும் நாட்டுக்கும் தேவை.

வாழ்க இவர்களது சேவை.

https://www.youtube.com/watch?v=XCAxdLJrvuU

நகர சபை இவர்களை பாராட்ட வேண்டும். விருது அளிக்க வேண்டும்.

௨.   Donut Shop

ஐயா, வல்வை நகரம் படித்தவர்களை கொண்டது. வாங்கி விற்பது வியாபாரம். வல்வையில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி விற்றால் அது அவர்கள் திறமையைக் காட்டுகின்றது. அன்று கடத்தல் செய்து சேலையும் வேட்டியையும் விற்றார்கள். இன்று, வெளி நாட்டு சீனி பண்டங்களை விற்கின்றார்கள். வெளி நாட்டு செலவாணி அதிகம். அதோடு நீரழிவு நோய்க்கு அத்திவாரம் இடுகின்றார்கள். வல்வையில் பண்டங்களை உற்பத்தி செய்து விற்க முடியாதோ.

சிறு தொழிற்சாலைகளை நிறுவ முடியாதோ? கோழிப்பண்ணகளை நிறுவ முடியாதோ?

அன்றோ எள்ளு புண்ணாக்கு என்று சிறு பண்டங்க்களை உண்டார்கள். ஏன் இன்று, இப்பண்டங்களை அழகாக செய்து விற்க முடியாதோ?

சிற்றின்பமா? பேரின்பமா?

சுய புத்தியா? சொல்புத்தியா? என்றால் எது திறமை.

வல்வை சுலக்சும் பிச்சுமணியும் சுய புத்தியோடு நடிக்கின்றார்கள். இது அவர்கள் திறமை. டோனக்ஸ் கடையும் சிறிது சிந்திக்கவேண்டும்.

கௌரவ மந்திரி டக்லஸ் தேவானந்தா அவர்கள் உள்ளூர் உற்பத்திக்காக பாடுபடுகின்றார்.

ஒரு நகர அபிவிருத்திக்கு நகர சபையும் பொறுப்பேற்க வேண்டும். இதனால்தான் இதற்கு உள்ளுர் ஆட்சி என்கின்றோம்.

 

தயவு செய்து இம்மடலை வல்வை சுலக்ஸ்சுக்கும் பிச்சுமணிக்கும் அறிவிக்கவும்.

 

நன்றி ஐயா.

 

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  5-1-2025 Harry 47, Cromwell Drive Rowville   Hi Harry We are starting the new year 2025. However, I regret to inform you that ...