Last & Final Appeal
to the Tamils in Sri Lanka
By Engr. Kanthar Balanathan
DipEE (UK),
GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey), C.Eng., MIEE,
Former
Director of Power Engineering Solutions Pty Ltd, Consulting Electrical
Engineers
Leading
Engineer of the World 2006, UK Authority Award
01-10-2023
அன்புடையீர்,
சாதி வெறியும் ஊழலும் நிறைந்த தமிழ்
அரசியல்வாதிகளுக்கு.
ஐம்பத்திஆறு வருடமாக வெளி நாட்டில் வாழும் ஒரு தமிழனின்
திருக்குறள் மோகமும், தமிழ் மக்கள் நல விளக்கமும்.
Quote:
“வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை சேர்த்த
இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல். திருக்குறளை படிக்காத
தமிழன் இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் நன்னெறி நூலாக உள்ளது.
இவ்வள்ளுவன் தந்த குறளை மாணவர்களுக்கு
எட்டாம் வகுப்பில் இலக்கியத்தில் ஒரு தனி பாடமாக கற்பித்தால் எப்படி இருக்கும். ஒரு
வாழ்க்கை வழிகாட்டியாக இருக்குமல்லவா?
யாழ் தமிழர்கள் கூறுவார்கள், ஆனால் அதனை பின் பற்றுவது
கிடையாது. குறள் நூலை பதிவிறக்கம் செய்வதற்கு இந்த இணையதளத்தை கிளிக் செய்யவும்.
https://www.tamilvu.org/library/nationalized/pdf/71-tirukkurlarv.munusamy/thirukural_athikara_villakkam.pdf
சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின்
குரலுக்கு இந்த இணையதளத்தில் விளக்கம்.
https://www.youtube.com/watch?v=YlZaH3xcdhM
குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் மு.வ உரை: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே,
ஆயினும் செய்கின்ற
தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. சாலமன் பாப்பையா உரை: எல்லா மக்களும் பிறப்பால் சமமே;
அவரவர் செய்யும்
செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும். கலைஞர் உரை: பிறப்பினால் அனைவரும் சமம்
செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
; என்னுடைய சாதித்துவம் பற்றி எழுத்து. என்னுடைய இணைய தளத்தில் பார்வை இடவும்.
https://neuronmind.blogspot.com/2023/06/by-engr.html
யாழில் உள்ளோர் மூடர்கள்.
என் பார்வையில்
வேளாளர் சோம்பேறிகள். தொழில் நுட்பம் என்ன என்று தெரியாதவர்கள். பணத்தை வைத்து, தாங்கள் பெரியவர்கள் என்று அலட்டி கொள்வார்கள்.
உதாரணம்: ஐங்கரநேசனின் பேட்டியில் கூறினார். நீதிபதி விக்னேஸ்வரன்
கேட்டாராம், ஐங்கரநேசன் நீர் என்ன சாதி என்று. பின்பு
விக்னேஸ்வரன் கூறினாராம்: நீர் வெள்ளாளன் என்று கூறாதபடியால் நீர் வெள்ளாளன் இல்லை
என்று. இது ஒரு வெட்கக்கேடான விடயம். ஏன், ஒரு நீதிபதி, கடந்த வட மாகான சபையில் முதல் மந்திரியாக இருந்தவர். இவர் எப்படி
சட்டத்தையும், மனித நேயத்தையும் கடைப்பிடிப்பார்.
ஐங்கரநேசன் கூ றியபடி விக்னேஸ்வரன் உள்ளுர் ஆட்சி மன்றத்திலும் இனி கேட்டு வெல்ல
முடியாது. இனி மேல் அவர் வீடு செல்ல வேண்டியதுதான். விக்னேஸ்வரன் ஒரு அரசியல்
இடத்திலும் உட்கார தகுதி அற்றவர்.
ஆனாலும், விக்னேஸ்வரன் நேர்மையானவர்.
இலங்கை தமிழர்கள்
சாதி வெறியை விட்டு விலகி எல்லோரையும் மதித்து வாழ்ந்தால் தமிழ் சமூகம் ஒரு நல்ல
இனமாக மாறும்.
தொழில் நுட்பம்
என்றால் என்ன? ஒரு வெள்ளாளன் என்பவன் ஆழ் கடலுக்கு
போய் மீன் பிடித்து வர முடியுமா? ஆனால் ஒரு மீனவன் விவசாயம்
செய்ய முடியும். இப்படி விடயங்களை தங்கள் மண்டைக்குள் புகுத்தவும்.
மஹியங்கனையில்
வாழும் ஆதிவாசிகள் யாழ் வருகை தந்தபோது யாழ் மக்கள் பெரும் ஆரவாரத்தோடு அவர்களை
வரவேற்று மாதிய உணவு பரிமாறி உண்டு மகிழ்ந்தார்கள். வரவேற்கத்தக்கது. மிகவும்
பாராட்டத்தக்கது. ஆனால், இவர்கள்
மனநிலை: வடக்கில் இருக்கும் யாழ் ஆதிவாசிகளாக கருதப்படும் சீவல் தொழிலாளர்கள் தாங்கள்
கத்திகளை வைக்கும் பையோடு இடுப்பில் கட்டி வந்தால் அதே மக்கள் இவர்களை வரவேற்று
உணவு கொடுப்பார்களா? வரவேற்பார்களா? இதுதான் யாழ் தமிழன்
குணம்.
அதிகாரப் பகிர்வு
எதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு எனும் கோரிக்கையில் மிகவும்
தீர்மானமாக இருக்கின்றார்கள். அப்படி என்றால்தானே சாதி குறைந்தவர்களை ஆளமுடியும்.
எனக்கு இப்பொழுது எண்பது அகவை (வயது) என்னுடைய KKS எட்டு வருட சீமெந்து தொழிற்சாலையில் நான் கண்ட சாதி
வேற்றுமை வெறி சீரணிக்க முடியாதது. வெறியர்கள்.
போதாததற்கு காவல் அதிகாரம் தேவை. ஏன். அப்பொழுதுதானே சாதி குறைந்தவர்களை
அமத்தமுடியும்.
நான் ஜிம்பாப்வே அரசியலில் ஈடுபட்டிருந்தேன். Zanu pf -member. ஒரு பிரிவிற்கு யான் ஒரு Secretary. அணு சேரா நாடு அங்கத்தவர்களின் மாநாட்டில் பிரச்சாரம் செய்து கௌரவ ராஜீவ்
காந்தி அவர்கள் இலங்கை வந்து மாகாணசபைகளை அமைக்கும் திருத்தத்தை JRJ,இடம் சொல்லி அமுலாக்கினர். ஆனால், பிரபாகரன் ஒரு
வடிகட்டின முட்டாள். எதிர்த்தான். இந்த இடத்தில் உமா மகேஸ்வரன், பத்மனாபா, டக்லஸ் தேவானந்தாவோ தலைவனாக இருந்திருந்தால் தமிழ் மக்கள் இப்படி
கஷ்டத்தை இப்பொழுது அனுபவிக்க மாட்டார்கள்.
எத்தனை அரசியல்வாதிகள் எத்தனை நாட்டிற்கு சென்று இத்தனை வருடமாக பிரிவு
கேட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை இப்படி எத்தனையோ சபைகளில் சென்று கதைத்தார்கள்.
என்னத்தை கிளித்தார்கள். இப்பவும் பறக்கின்றார்கள். எதற்கு? என்னத்தை கிழிப்பதற்கு? ஐரோப்பாவிற்கும், ஐக்கிய
அமெரிக்காவிற்கும் ஐக்கிய ராச்சியத்திற்கும் அடிக்கடி பறக்கின்றார்கள். என்ன
கிழிப்பதற்கு?
ஒவ்வொரு நாட்டிலும் சங்கங்கள், சபைகள், ஆலயங்கள் உண்டு. இவற்றின் தலைவர் ஒரு
மருத்துவ டாக்டராக இருப்பார். ஏன் இவர்களுக்கு மருத்துவ தொழில் தெரியாதோ? ஒவ்வொரு சங்கங்களிலும் திருட்டு லஞ்சம், ஊழல்
அதிகம். எத்தனை வானொலிகள், எத்தனை சங்கங்கள், எத்தனையோ
மக்கள் வந்த வாதாடுகின்றார்கள்.ஒருவருக்கும் மண்டையில் ஏறவில்லையே. 75 வருடமாக அரசியல் பேசும் எம் அரசியல்வாதிகளுக்கு தந்திரோபாய யுக்தி இல்லை.
மூலோபாய திட்டமிடல் அறிவு திறமை பூஜ்ஜியம். செல்வநாயகம் அறிவே இல்லா ஜடம்.
இன்று உலகளாவிய விடுதலை எனும் சங்கங்கள் புலிகளின் பணத்தை திருடினார்கள்.
பெரிய வியாபார ஸ்தாபனங்களை உருவாக்கி, பெரிய பணக்காரராக வாழ்கின்றார்கள்.
நான் தனி ஒருவனாக முஸ்லிம் மக்களின் துணையோடு பிரச்சாரம் செய்து ராஜீவ்
காந்தியின் மூலமாக மாகாண சபைகள் உருவாகியது. முஸ்லிம் மக்கள் மிகவும்
நாணயமானவர்கள். நேர்மையானவர்கள். புலிகள் கொலைவெறி பிடித்து மக்களை கொன்று
குவித்தார்கள். இதனால்தான் யான், இந்த பொறுப்பை எடுத்து செய்தேன்.கொலை வெறியையும் கொலைகளையும்
நிற்பாட்டுவதற்கு. பதவி மோகம் பிடித்தல்ல.
2013 – 2018 வரை இம்மாகாணசபை நடை முறையில் இருந்தது. ஆனாலும் தனது தம்பிக்கு மந்திரி
பதவி கொடுக்கும்படி ஒருவர் வாதாடினாராம். ஒருவன் மகன் தனது மனைவியின் பெயரை ஒரு
தெருவிற்கு சூட்டும்படி வாதாடினாராம். இதுதான் தமிழன் குணம்.
சம்பந்தர் என்ன செய்கின்றார்?சாப்பாடு, உணவு, நித்திரை. வேறு என்ன?
இவர் வயது இப்போ – 90. எனது வயது 80.
இவர் இதுவரை என்னத்தை கிழித்தார்? தனது ஆதரவாளர்களுக்கும்
சொந்தங்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்தார்.
சிவாஜிலிங்கம் மற்ற முட்டாள். இரண்டாயிரம் தேங்காய் உடைத்தார். ஏன்? ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் வெல்வதற்கு. இப்படி பல
முட்டாள்கள் தமிழ் இனத்தில் உள்ளார்கள்.
ஆனபடியால், இனி வல்வையில்
இருந்து ஒரு முட்டாள்களும் தமிழ் மக்களுக்காக அரசியல் பேச வரக்கூடாது.
13 ம் திருத்தம்
2013-2019 வரையிலான மாகாண சபை இயங்கியபோது ஊழல் நிறைந்த சபைகாளாக இயங்கிவந்தது. 2019 ம் ஆண்டு இலங்கை திறைசேரி பணம்
இல்லாமல் மக்கள் சரியான கஷ்டத்தை அனுபவித்தார்கள்.ஒன்பது மாகாண சபைகள்
இயங்குவதற்கு இலங்கையில் வருமானம் போதாது. ஊழல் நிறைந்த நாட்டில் மாகாண சபைகள்
இயங்க முடியாது. மக்கள் வருமான வரி செலுத்துவதில்லை. போதிய அளவு அந்நிய செலவாணி நாட்டிற்குள்
வருவதில்லை. ஏற்றுமதி குறைவு. ஆடம்பர செலவுக்கு
பணம் யார் கொடுப்பார். மாகாண சபைகள் இயங்கி ஆறு வருடத்தில் நாட்டின் திறைசேரி திவாலானது.
தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதன் விளைவு என்னவென்று விளங்குமா?
தமிழனுக்கு அதிகாரம், பதவி
கொடுப்பதற்காக, இலங்கை அரசாங்கம் IMFல்
பில்லியன் வரை கடன் பெற முடியுமா? பதிமூன்றாம் அதிகாரத்தை
செயல் படுத்தினால் மக்களுக்கும் நாட்டிற்கும் என்ன லாபம்?
எமது சட்டத்தரணிமார்கள் என்றும் தெருவில் நின்று சத்தியாக்கிரகம்
செய்கின்றார்கள். பாத யாத்திரை, கடை
அடைப்பு, நாட்டை பாதாளத்தில்
தள்ளுகின்றார்கள். எல்லோருக்கும் பதவி வேண்டும். உழைப்பல்ல,
பதவி மோகம்தான். சுகாஷ், செல்வரஜா, கஜேந்திரன் போன்றவர்களை
விளக்குமாறு, தும்புக்கட்டையாக பாவிக்கின்றார்கள். தாங்கள்
பின் நின்று, இவர்களை முன் தள்ளுகின்றார்கள்.
ஒற்றுமை
இலங்கையில் மூன்று தமிழ் பேடும் மக்கள் வாழ்கின்றார்கள். வடகிழக்கு, மலையகம், முவர்ஸ் (முஸ்லிம்). மூ ன்று
இனமும் பேசும் மொழி – தமிழ். முஸ்லிம்
மக்கள் சிறந்த தமிழ் பேசுவார்கள்.செய்திகள் வாசிக்கும்பொழுது முஸ்லிம் மக்கள்
சிறந்த முறையில் செய்திகளை மக்களுக்கு எடுத்து சொல்வார்கள்.
இந்த மூன்று மக்களும் ஏன் கூ ட்டு சேரக்குடாது. எதற்காக இந்த பிரதேசவாதமும் இன
வேற்றுமையும் சாதி வேற்றுமையும். மூவர்ஸ் எமது சகோதரர்கள். அரசியலிலும் ஒன்று
சேரலாம்.
ஜீவன் தொண்டைமான் ஒரு சிறந்த அரசியல்வாதி. அங்கஜன் ராமநாதன் ஒரு சிறப்பு
மிக்கவர், தேவானந்த
மற்றைய மக்களுக்கான அரசியல் தலைவர். சற்று சிந்திக்கவும். மணிவண்ணன் ஒரு சிறந்த
சிந்திக்கும் அரசியல்வாதி. பேதம் வேண்டாம். தமிழ் அரசியல்வாதிகளும் ஒற்றுமையை
நிலைநாட்டவேண்டும்.
ஐந்து லட்சம் குடியுரிமை பறித்த தமிழர்களை இந்தியா, கர்நாடகாவில் குடி அமர்த்தி இன்று இவர்களை இலங்கைத்தமிழர்கள்
என்று தான் இந்தியாவில் கூறுகின்றார்கள்.
இவர்கள் ரோப்பர், தேயிலை, கரும்பு, நெல், குரக்கன் போன்ற தானியங்களை விவசாயம் செய்து
சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள்.
மக்களுக்கு
மக்களே- நீங்கள் எல்லோரும் சாதி பார்த்து வேளாளனுக்கு மாத்திரம் வாக்கை
செலுத்த வேண்டாம். எவன் சிறந்த அரசியல்வாதியோ அவரை தெரிவுசெய்யவும்.
75 வருடமாக மக்களை ஏமாற்றி வரும் எமது தமிழ் இனம் இனிமேலாவது மாறட்டும்.
என்னுடைய பார்வையில் நான் செல்வநாயகம், சம்பந்தன் இவர்களைவிட அரசியலில் அறிவு- ஞானம் பெற்றவன். ஆனால் எனது
பார்வையில் இலங்கையில் அரசியல் ஒரு சாக்கடை. ஏன் தமிழ் இனத்தின் அரசியல் ஒரு ஊழல்
நிறைந்த சாக்கடை. குப்பையங்கள்தான் அரசியலில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.
இனிமேலும் திருந்தாவிட்டால் தமிழ் இனம் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அழிந்து
போகும்.
இந்த தமிழன்கள் இன்று புலம் பெயர் நாட்டில் சாதி வெறியன்களாக மாறுகின்றார்கள்.
புலம் பெயர் நாட்டிலும் அடி வாங்குவார்கள்.
ஆண்டவன் காப்பாற்றட்டும்.
இது கடைசி சந்தர்ப்பம்.
எமக்கு 2007 ல் உலகின்
இரண்டாயிரம் 2000 அறிவு ஜீவிகளில் ஒருவனாக விருது கிடைத்தது.
ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏன்? எமக்கு PhD இல்லை.
தமிழர்களுக்கு: ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை மிகவும் சிறப்பானது. சாதி முறையை விட்டு ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையை
கற்றுக்கொள்ளவும்.
மகியங்கனை ஆதிவாசிகளை விட எமது தமிழ் மக்கள் எதில் குறைந்தவர்கள். வரலாற்று ரீதியாக
நாகர் எனும் இவர்களுக்குதான் யாழ் மண் சொந்தம்/உடமை. சங்கிலியனுக்கல்ல.