Jan 29, 2023

 மாநிலம். தமிழ் நாடு, தமிழகம் வாத நிலை

By Engr. Kanthar Balanathan

DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm(Finance-Massey), C.Eng., MIEE,

Former Director of Power Engineering Solutions Pty Ltd, Consulting Electrical Engineers

 

 

கடந்த சில நாட்களாக தமிழ் நாடு, தமிழகம் வாக்கு வாதம் சீறல் நிலை நிலை பெற்றுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கவிஜரூம் பங்கு பற்றுகின்றார்கள். இங்கு விபரத்திற்காக ஓர் உதாரணம் தர விரும்புகிறேன்.

அன்றைய காலாக்ட்டத்தில் தமிழ் சரித்திரம் கூறுகின்றது குறிஞ்சி முல்லை மருதம், நெய்தல், பாலை என்று.

குறிஞ்சிநாடு, முல்லை நாடு, மருதம் நாடு, நெய்தல் நாடு, பாலை நாடு, என்றா கூறுகின்றது.

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, என்று கூறுகின்றது. ஏன்? இவை தனித்தனி இராச்சியங்கள். ஆனால் இன்றோ, இவை எல்லாம் சேர்ந்து ஒரு மாநிலமாக இருக்கின்றது. அதுதான் தமிழகம் என்பது.

தமிழ் + அகம் = தமிழகம் .

ஆனபடியால் தமிழகம் என்பது தமிழ் மக்களுடைய வாழும் பகுதியாகும்.

Quote: பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது, ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும். பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன.அகம் என்பதற்கு மனிதர்கள் வாழும் இடம், வசிப்பதற்காக மனிதர்கள் கட்டும் இருப்பிடம்.

தமிழகம் தனி நாடல்ல.

இந்திய கண்டத்தில் ஒரு மாபெரும் புகழ் பெற்ற மாநிலம் தமிழகம். அதை நாம் எல்லோரும் பெருமையோடும் மதிப்போடும் சொல்லவேண்டும்.

என்னுடைய பூர்வீகம் தமிழகம், தமிழ் நாடல்ல.

இல்லையெனில் அவர்கள் இனவாத கொள்கையுடைவர்களாகும்.

ஒரு கவிஜர் கூறினார். “தமிழ் நாடு என்பது “தமிழை நாடு” என்பதாகும் என்று. அதாவது தமிழை அணுகு என்பதாகும். அறிஞர் அண்ணாவின் கருத்துரை என்று. அணுகு என்றால்: அருகில் செல்லுதல், நெருங்குதல். அறிஞர் அண்ணா, அந்த அர்த்தத்தில் கூறி இருந்தால் அவர் அறிவில் கேள்விக்குறி வந்திருக்கும். ஆனபடியால் மாநிலத்திற்கு தமிழை அணுகு என்பது பிழை.

இன்றைய விஞ்ஞான உலகத்தில் அறிவியல் மிகவும் முக்கிய மானது.

தமிழகம் என்பது ஒரு பொருத்தமான சொல்லாகும். ஆளுநர் பரிந்துரைத்த தமிழகம் எனும் கூற்று மிகவும் பொருத்தமானது.

கவிஞர்கள் சினிமாவுக்கு பாட்டு எழுதுவதை மாத்திரம் செய்யவும்.

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  5-1-2025 Harry 47, Cromwell Drive Rowville   Hi Harry We are starting the new year 2025. However, I regret to inform you that ...