Jan 29, 2024

  

 

தமிழன் ஒற்றுமையும் வேற்றுமையும்

 

கந்தர் பாலநாதன்

 

 

தயவு செய்து இந்த காணொளியை பார்க்கவும்.

Ref: https://en.wikipedia.org/wiki/Tamil_population_by_nation

 

நாமில்லா  நாடில்லை,

நமக்கு ஓர் நாடில்லை,

நம்மினமோ தமிழினமாம்,

நரம்பியக்கடத்தியில் வேரூண்டி பாய்வது,

சாதி வெறி, மத வெறி, இனவெறி, பிரதேசவாதி வெறி,

மீனவரில் எத்தனை இனம்,

மலம் கழிக்கும் வயல்தனில்,

கால் உழக்கி உழுபவரில் எத்தனை இனம்,

கட்டையில் போவதற்கு,

சுமப்பவரில் எத்தனை இனம்,

ஆலயத்திற்கு கோடி கொடுப்பு,

வீதிக்கு விதி ஆலயம்,

தொழிற்சாலைகள் கட்டுவதற்கு ஆர்வம் இல்லை,

யாழில் பல்பொருள் அங்காடிகள் பல,

அதில் ஊள்ளுர் உற்பத்திப்பொருள்கள் இல்லை,

வேற்று நாட்டு இறக்குமதிகள் அதிகம்,

பொருளாதாரத்தின் பொருள் தெளிவில்லை,

ஊருக்கு ஊர் அரசியல் கட்சிகள்,

எல்லோரும் தலைவராக வேண்டும்

எமக்கு ஒரு நாடென்று

ஆளும் தகுதி எமக்கு உள்ளதா?

மன நுண்ணறிவு உண்டானால்,

சிறிது சிந்தித்து பாருங்கள்,

எமது பலவீனம் ஏங்கே தேங்கி நிற்கின்றது.

 

எமது பலவீனம் எமக்குள்ளே வேரூண்டி எம்மை அங்கலாய்க்கினஂறது. இத்தனை நாடுகளில் வசிக்கும் தமிழரை அன்று ஆங்கிலேயர் கப்பலில் அடிமைகளாக கொண்டு சென்றார்கள். இன்றும் அடிமைகளாக  செல்கின்றார்கள். இதை எப்படி சொலஂவது? ஆசையா, அங்கலாய்ப்பா?பேராசையா?

 

தமிழ் நாடே திவாலாகின்றது. ஏன்? இந்தியாவே திவாலாகுமா என்று சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இதில் ஒற்றுமை இன்றி இன்றும் குழந்தைகள் போல போட்டி பொறாமை வாய்சொல்லு, இதை என்னவென்று கூறுவது? முட்டாள்தனமா?, உணர்தல் இல்லாமையா?, அறிவாற்றல் இல்லாமையா? என்று எம்மனங்கள் திருந்தி, உணர்ந்து, உண்மைகள் வெளிவரும்.  

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  04-04-2025 Engr. Kanthar Balanathan DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey)  Former Director of Power ...