திறந்த மடல்
22nd November 2015
தந்தை மு.
கருணாநிதி,
மாண்புமிகு கடந்த
தமிழக முதல்வர்
திராவிட
முன்னேற்ற கழகம்,
# 367-369, "அண்ணா
அறிவாலயம்",
தேனாம்பேட்டை,
சென்னை 600 018.
தமிழ்நாடு -
இந்தியா, சென்னை 600 018. தமிழ்நாடு –
இந்தியா
மாண்புமிகு கடந்த
தமிழக முதல்வர் தந்தை மு.க அவர்கட்கு,
தமிழகமும்
சிங்களத்தீவும்
பாரதி அன்று
பாடினான்: “சிங்களத்தீவிற்கொரு பாலம் அமைப்போம்” என்று. அத்தீவில் பிறந்து
வளர்ந்து, இலவசக் கல்வி
பயின்று, சகலதும்
இலவசமாகப் பெற்று, வேலை பார்த்து, 48வருடத்தின் முன்
அத்தீவிலிருந்து புலம் பெயர்ந்த தமிழன் ஒருவன் கருத்துக்களை எழுத முனைகின்றேன்.
தத்துவம், ஆன்மீகம், கவிதை, கருத்து, தமிழர் பண்பாடு, இப்பார்வையில்
எனக்கு உத்வேகம் அளித்தவர்கள், மூவர்.
1. சுப்ரமணியபாரதியார்.
2. திருவள்ளுவர்.
3. பாரதிதாசன்
பாரதி எம்மோடு
வாழ்ந்த கால சிறப்புமிக்க பெரிய கவிஞர். திருவள்ளுவர் கி.மு.31ம் ஆண்டு
பிறந்தவர்.
பரப்பார்வையில்
பலர், பல, கருத்துகளையும், ஆலோசனைகளை
கூறினாலும், மனித உயிர்கள்
இன்றும் மிருகங்களாகவே வாழுகின்றார்கள். சட்ட திட்டங்கள், ஒழுங்கு முறைகள்
வகுக்கப்பட்டு அரசாண்டாலும், அரசாளுபவர்களும், அரசியல்வாதிகளும், குடிமக்களும், சட்டத்திற்கும், பண்பாட்டிற்கும்
வெளியேதான், தான்தோன்றித்தனமாக
வாழுகின்றார்கள்.
தமிழகத்தை
இன்றுவரை எத்தனை சுத்தமான தமிழர்கள் ஆண்டார்கள். தமிழ் பேசுபவர்கள் தமிழர்களா? அரச முறையில், எத்தனை தமிழ்
அரசர்கள் தமிழ் மாநிலத்தை ஆண்டார்கள். பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்பதுதான்
ஆராய்சஂசியின் முடிவு. சோழர்கள், ஆதியின் களப்பிரர்களிலிருந்து வந்தவர்கள்.
முத்தமிழ்
படைத்து, முத்தமிழ் சங்கம்
வளர்த்த நாடு என்றால், அது பாண்டி
நாடுதான். மீன்கொடி பறக்க, மீனாட்சியின்
(மீன் + ஆட்சி) அருளோடு, முத் தமிழ்
படைத்து, இன்றும் அம்
முத்தமிழை காத்து, வளர்க்கும்
பிரதேசம், பாண்டி நாடுதான்.
இன்றோ, தமிழகத்தை பலரும்
ஆக்கிரமித்து, சினிமாவில்
புகுந்து, தமிழன் பணத்தை
சுரண்டிக் கறந்து, பலரும்
கோடீஸஂவரர்களாக மலர்ந்திருக்கின்றார்கள். மைசுரில் தமிழர்களை வதைத்தவர்களும், இன்று, தமிழகத்தில்
கோடீஸ்வரர்களாக வலம் வருகின்கின்றார்கள். சேரியை மாடி வீடுகளாக்குவேன் என்று சொன்ன
மக்கள்திலகமும் (MGR) மலையாளம்தான்.
ஆனால் அவரால் சேரிகளை மாடி வீடுகளாக்க முடிந்ததா? இல்லையே! சேரி மக்களை சேரி மக்களாகவே வாழவைக்கின்றார்கள்
அரசுகள்.
தாழ்த்தப்பட்ட
மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு பணம் ஒதுக்கிட்டதா? அந்தப்பணம் எங்கே
என்று கேட்டால் மக்களுக்கு அரசு விடை கொடுக்கமுடியுமா? அந்தப்பணத்தில்தான்
இலவசப் பொருட்கள் மக்களுக்கு கொடுக்கப்பட்டதா? இலவச தொலைக்காட்சிப்பெட்டிகள், மடிக்கணிணிகள்?
இன்று தமிழகத்தை
பிற மாநிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தோர் தமிழகத்தில் வாழும் தங்களுடைய
இனத்தின் உதவியுடன்
சினிமாவில் நுழைந்து, கோடீஸ்வர
ராயிருக்கின்றார்கள்.
ஐயா, ஏன், தொலைக்காட்சிகளிலேயே
இசை பாடி பரிசு பெறும் சிறு பிள்ளைகள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? இல்லையே. தமிழையே
கொலை செய்கின்றார்கள். இன்றைய முதல்வர் தமிழா? கன்னடத்தைச் சேர்ந்தவர். இவருடைய அதி உயர்ந்த படிப்பென்ன?
தமிழகத்தில் மிக
அறிவுள்ள, படித்த, தமிழ் மக்களை
ஆளுவதற்கு தகுதி உள்ளவர்கள் ஒருவருமே இல்லையா? திரு ஸ்டாலின் படித்தவர், அறிவுள்ளவர், புத்திஜீவிகளை ஆளத்தகுதி உள்ளவர். தமிழகத்தை சேர்ந்த
மந்தைக்கூட்டம் மக்கள், தகுதியானவர்களை
தெரிந்தெடுக்க வேண்டும்.
பாட்டாளிமக்கள்
கட்சி டாக்டர் ராமதாசுக்கு தமிழகத்தில் உள்ள பக்தியை விட சாதிவெறி அதிகம்.
ஆமாம், விண்ணப்ப
படிவங்களில் சாதிக்கென்று நிரப்புவதற்கு ஒரு இடம் உள்ளது. 21ம்நூற்றாண்டிலும்
இப்படி ஒரு துவேஷம் தேவையா?
எத்தனையோ
ஆண்டுகள் கடந்துவிட்டது. வெள்ளையர்களிடமிருந்து இந்தியன் சுதந்திரம் வாங்கியதாக
ஒரு எண்ணம். ஆனால் உண்மை என்ன? ஆளும் இனம் மாறியது. அவ்வளவுதான். சோனியா காந்தி யார்? ராகுல் காந்தி
யார்? ஒன்று முழு
வெள்ளை, மற்றது அரை
வெள்ளை. பல வருடங்களுக்கு முன் யான் ஒரு கட்டுரை பிரசுரத்திருநஂதேன். “ஜனநாயகமும்
அதனை ஆளுகின்ற பணநாயகங்களும்”. இன்று பணநாயகங்கள்தான் அரசியலில் ஈடுபட முடியும்.
இதனால்தான்
மற்றைய மாநிலங்களில் என்ன சொல்கின்றார்கள்? அரசியல்வாதியாகவோ அல்லது முதல்வராக ஆவலா? தமிழகத்திற்கு
செல்லுங்கள். அங்குள்ள, மரமண்டைகள்
எல்லோரும் சினிமா பைத்தியம். சினிமாவில் நுழையுங்கள். அங்கிருந்து அரசியலில்
புகுந்து, சமஉரிமை, கத்தரிக்காய், வாழைக்காய் என்று, சினிமாவில்
சொல்வதுபோல பஞ்சு டயலாக் எடுத்து விடுங்கள். அந்த விளக்கமற்றவர்கள்
வாக்களிப்பார்கள். அதன் பின் உங்கள் ராச்சியம்தான்.
சினிமாவிற்குக்
கூட தென் இந்திய நடிகர் சங்கம் என்றுதான் உண்டு. இன்று விஷால் உள்
புகுந்திருக்கின்றார். இவர் யார்? எதற்காக “தமிழ்நாடு நடிகர் சங்கம்” என்று உருவாக்கமுடியாது? இன்றல்ல, பலகாலமாக, சினிமாவையும்
இசையையும் ஆக்கிரமித்திருப்பது பிற மாநிலத்தார். மலையாளம், ஆந்திரா, கர்நாடகா, மும்பாய் இப்படி
பல. மும்பாயிலிருந்து வெள்ளைத்தோல் என்றால் இறக்கு மதி செய்வார்கள்.
ஐயா, உதாரணம்:
ஆபிரிக்க நாடுகளில், சினிமாவிற்கு
என்ன அமெரிக்காவிலிருந்தா ஆண், பெண்களை இறக்குமதி செய்கின்றார்கள். ஏன், மும்பாய்
இந்திக்கு, தமிழ்
நாட்டிலிருந்தா இறக்குமதி??
வந்தாரை
வாழவைக்கும் தமிழகம் என்பது தமிழ் நாட்டு மக்களின் அரட்டை. கட்ட பொம்மன், வீரத்தமிழன்
என்றும், மறத்தமிழன்
என்றும் அரட்டை அடித்தார்கள் யாழ் தமிழர்கள். ஒன்றை அறியாமல் அரட்டை அடிப்பதுதான்
தமிழன் நடைமுறை.
இன்று, தொலைக்காட்சிகளில்கூட
மற்றைய மாநிலத்தார்தான் ஆதிக்கம். தமிழகத்தில் சென்னையிலோ அல்லது கோவையிலோ தமிழர்
நடக்க முடியாது. ஏன்? வந்தேறு குடி
மக்கள் அதிகம், இடி
படுகின்றார்கள். தமிழகம் ஒரு “வந்தாருமூலை” பிரதேசம் ஆகிவிட்டது. தமிழகத்தின்
வரையறையின் படி இவர்கள் எல்லோரும் என்ன சாதி?
“சாதி இரண்டொழிய
வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா
நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள
படி”
ஔவையின் நல்வழி
கூறுவது இட்டார் பெரியோர், இடாதார்
இழிகுலத்தோர். வந்தாரை
வாழவைப்பதில், தமிழக தமிழ்
மக்கள் பெரியோர், குடியேறியவர்கள்
இழி குலத்தோரா? அத்தோடு, பொதுவாக
மதிப்பீடு செய்யும் இடத்தில், தமிழக தமிழ் மக்கள் எத்தனை விழுக்காடு பெரியோர்? 99.9% தமிழர்
இழிகுலத்தோர். ஏன் ஐயா? கோடி கோடியாக
உழைக்கின்றார்கள் சினிமாவில். யார் பணம் இவை? மக்கள் பணம். புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் படங்களை
எடுத்து திரை இடுகின்றார்கள். யார் இவர்கள். இவர்கள்தான் இலங்கை தமிழர்கள். எமக்கு
தெரிந்த வரையில் தமிழக தமிழன் ஒருவர் திரை இட்டதாக அறிந்திருக்கவில்லை.
அறியச் செய்தோன்
தமிழன்
அறிந்த அனைத்தும்
வையத்தார்கள் .......... பாரதிதாசன்
நமதடா இந்நாடு –
என்றும்
நாமிநஂ நாட்டின்
வேந்தர்
சமம் இநஂ நாட்டு
மக்கள் – என்றே
தாக்கடா வெற்றி
முரசை! ............ பாரதிதாசன்
எந்த நாளும்
தமிழர் – தம்கை
ஏந்தி
வாழ்ந்ததில்லை .............பாரதிதாசன்
பாரதிதாசன்
கவிதைக்கு தமிழக அரசின் விடை என்ன?
தாங்கள் தமிழக
முதல்வராக பதவி வகுத்த பொழுது தலித் மக்கள் ஒருவரும் கொலை செய்யப்பட்டதாக
அறியவில்லை. ஏன் ஐயா, தாழ்ந்த குல
மக்கள் ஒருவரையும் வதைத்தாக அறிந்திருக்கவில்லை. காரணம், தங்களுடைய
அறிவும், மக்களின் மேல்
தாங்கள் வைத்திருக்கும் பாசம், அன்பு, இன உணர்வு, அத்தோடு, தாங்கள் பெரியாரோடு வாழ்ந்தீர்கள். ஆனால், ஜெயலலிதாவின்
காலகட்டத்தில் எத்தனை கொலைகள்? சென்னை சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் கொலை. இப்படி பல....
ஐயா, தலித் மக்கள்தான் தமிழகத்தின் மைந்தர்கள்.
தமிழகம் அவர்களுடயது. மாநிலம் அவர்களுக்குத்தான் சொந்தம். வந்தேறு குடிகள்
ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடுகின்றார்கள். வந்தேறு குடிகள் செய்யும் தொழிலை
வைத்து சாதி அடிப்படையை கொண்டு வரமுடியுமா?
ஐயா, விண்ணப்ப
படிவங்களில் “சாதி” என்பதொன்று தேவையா? எல்லோரும் தமிழர்கள்தானே? பின்பு என்ன
லாபத்தைத்தேடி விண்ணப்ப படிவங்களில் “சாதி” என்பது? திரு ஸ்டாலின் பதவிக்கு வந்தபின் தயை கூர்ந்து இந்த
கேள்வியை அழித்து விடுங்கள்.
என்னுடைய
பார்வையில்: தமிழக மக்கள் இந்திக்காரனைக் கண்டால் விழுந்து கும்பிடுவார்கள். இந்தி
பேசினால் மிக்க மரியாதை கொடுப்பார்கள். தமிழ் பேசினால் போடா என்பார்களாம்.
ஆங்கிலம்/இந்தி பேசினால், சார் வாங்கோ என்பார்களாம்.
மானம் கேட்ட பிழைப்பு. தமிழன் என்று சொல்வதே மானக்கேடு.
ஐயா, ஒரு முறை நாம்
தமிழகம் வந்த பொழுது, தனியார் பேருந்தொன்றில்
சென்னை சுற்றுலா சென்றோம். பேருந்தில் வந்த வழிகாட்டி இந்தியில் விளக்கி
கொண்டிருந்தார். நான் இரண்டு முறை எச்சரிக்கை செய்தேன். ஆங்கிலத்தில்
அல்லது தமிழிலும் கூறு என்று. ஆனால் அவர், இந்தியில் தொடர்ந்தார். அவர் ஒரு தமிழன். நானும் என்
மனைவியும் பத்து நிமிடத்தில் பேருந்தை விட்டு இறங்கினோம். நான் கொடுத்த பணம் வீண்.
Tamil Nadu Tamil Guides are
such thick-headed fools. இந்தி பேசினால் காலில் விழுவார்கள், முட்டாள்கள்.
ஐயா, நானும் எனது
குடும்பமும் பல நாடுகளில் வாழ்ந்தோம். இலங்கை, இந்தியா, லண்டன், நைஜீரியா, சிம்பாப்வே, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா. பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்
செய்திருக்கின்றோம். எந்த ஒரு நாட்டிலும் சாதி முறையோ, சாதித் துவேசமோ
இல்லை. எனது மதிப்பீட்டின்படி இலங்கையும் இந்தியாவும் ஒரு பேரழிவுமிக்க கேடு கேட்ட
நாடுகள். மிருக இனங்கள் வாழும் நாடு. சாதி துவேஷத்தை இந்தியா முழுமையாக
அழிக்காவிட்டால், வரும் 25வருடங்களில்
இந்தியா அழிந்தே போய்விடும். பிற இனம் ஆக்கிரமிப்பார்கள். உதாரணம், முஸ்லிம்
இனத்தில் சாதி முறைகள் இல்லை. முஸ்லிம் இனத்தில் எல்லோரும் இறைவன் மக்கள்.
ஆரியத்தின்
சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது;
1. பிறப்பு
2. குறிப்பிட்ட
சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும்.
3. பிற பிரிவினருடன்
கலவாமை / தனித்துவம் காத்தல்
4. தீண்டாமை
5. இவற்றை
மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்
தொல்காப்பிய
நால்வகைத் தொழிற்பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர்
மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;
’ஊரும் பெயரும்
உடைத் தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி
அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)
-இதன் பொருள்,
’ஊர், பெயர்,தொழிற் கருவி
ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப்
பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை
இந்த விதி விளக்குகிறது. (Ref:http://bsakthivel.blogspot.com.au/2013/12/blog-post_2.html)
சரி, இனி பார்ப்பனர்
-பிராமணர் தொழிலை பார்ப்போமா?
“கருங் கல் தனில் சிலை
வடித்து
புரியாத மொழி
தனில் தீபம் காட்டி
தட்டேந்தி யாசகம் பெறும் கூட்டமன்றோ
பார்ப்பனர்-கூட்டம்”
ஆரியத்தின்
சாதிக்கொள்கைப்படி பார்ப்பனர்/பிராமணர்/பூசாரிகள் மேலே கூறியதைத் தவிர வேறொரு
தொழிலையும் செய்யலாகாது. ஆனால், சுதந்திரம் கிடைக்கு முன்னரே சட்டத்தரணிகளாகி
விட்டார்களல்லவா?
இந்தியாவிலும்
இலங்கையிலும் நடப்பது, ஒரு வகை நிறவெறி
(apartheid), சாதிவெறி அல்லவா?
ஒவ்வொரு நாளும், எத்தனை கோடி
லீட்டர் பால், அபிஷேகம், பூசை என்ற
பெயரில் பூமியில் கொட்டப்படுகின்றது. எத்தனை கோடி மக்கள் உண்ண உணவில்லாமல்
இறக்கின்றார்கள். சிந்திக்க வேண்டிய விடயம்.
இந்தியாவும்
தமிழ் நாடும் இன்னும் ஒரு மாபெரும் பிழை விடுகின்றது: தமிழ் நாடு மீனவர்கள் இலங்கை
எல்லைக்குள் ஊடுருவி இவ்வளத்தில் உள்ள கடல் உயிர்களை பிடித்து செல்கின்றார்கள்.
இது பெரிய அடாவடித்தனம். இலங்கை எச்சரித்தும் தமிழக மீனவர்கள் எல்லைக்குள் ஊடுருவி
கடல் உயிர்களை பிடிக்கின்றார்கள். அப்படிஎன்றால், இலங்கை மீனவர்கள், என்ன, பாசியையா எடுத்துச் செல்வது. சர்வதேச சட்டத்தின் படி
எல்லைக்குள் ஊடுருவ முடியாது. ஏன், மேலே தெலுங்கு, வங்காளம், பரப்பளவில் மீன் பிடிக்க முடியாதோ? பயம், அல்லது
அவர்களுக்கு தமிழன் காட்டும் பயபக்தியா?
தொழில் ரீதியாகப்
பார்ப்போமா?
விவசாயி சேற்றில்
காலை வைத்தால்
தமிழன் சோற்றில்
கையை வைக்க முடியும்
மீனவர்
துடுப்பில் கையை வைத்தால்
தமிழன் சோற்றில்
கையை வைக்க முடியும்.
இதில் எங்கே ஐயா
சாதி வருகின்றது. இருவருமே மக்களுக்கு சோறு போடுகின்றார்கள்.
ஒரு சில
அரசியல்வாதிகள் தமிழ் ஈழம் என்று இலங்கை தமிழ் மக்களுக்கு உசுப்பேற்றுகின்றார்கள்.
ஏன் தமிழ்நாடு தனிநாடு கேட்கவில்லை. இந்த விடயத்திலே தமிழ் நாட்டு மக்களை கோழைகள்
என்றல்லவா முத்திரை குத்த வேண்டும். புலிகளுக்கு தமிழ் நாட்டில் அடைக்கலம்
கொடுத்து யாழையும் வன்னியையும் அழித்து விட்டார்கள் தமிழ் நாட்டார்.
கடந்த சில
நாட்களுக்கு முன் நடந்த வெள்ளப் பெருக்கு தமிழ் நாட்டிற்கு ஒரு எச்சரிக்கை அல்லவா? வெள்ளத்திற்கு
தாழ்த்த குலமக்கள், மேலோர், கிழோர்
என்றெல்லாம் அளவிடத் தெரியவில்லை போல. எல்லோர் வீட்டிற்குள் புகுந்தல்லவா விட்டது
வெள்ளம். இயற்கைக்கு தெரியுமா சாதி வித்தியாசம்? இயற்கைக்கு எல்லா மக்களும் ஒன்றே! அதுதான் நியதியும்
நீதியும்.
தமிழ் நாட்டு
மக்கள் யாழ் மக்களுக்கு உதவி செய்யவில்லை. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக யாழ்
மக்களை பகடைக்காயாக வைத்து, மறை முகமாக
அழிக்கின்றார்கள். தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முதுகு எலும்பு இருந்தால் ஏன்
தமிழ் நாடு கேட்கலாம்தானே?
தமிழ் நாட்டு
அரசியலுக்கு ஒரு நல்ல தமிழ்த் தலைவன் வரவேண்டும். அதை யாரென்று நிர்ணயிங்கள்.
இலங்கை
எல்லைக்குள் நுழைய வேண்டாம்.
ஐயா, இத்துடன் நான்
எழுதிய நூல் அனுப்பி வைத்துள்ளேன். : SriLanka, Sovereignty, Democracy and Terrorism”.
நன்றி, வணக்கம்
கந்தர் பாலநாதன்
Cc-கௌரவ மு. க.
ஸ்டாலின் அவர்கள்.