Feb 9, 2025

 1833 – இல் இருந்து இன்றுவரை தமிழர் செய்த - செய்யும் மாபெரும் தவறுகள்.

 

1.       1833 ல் ஆங்கிலேயர் மூன்று ராச்சியங்களையும் இணைத்து இலங்கை என்று அரசாண்ட பொழுது எமது தமிழர் கைகட்டி வாய்பொத்தி நின்று வாழ்ந்தது மாபெறும் தவறு.  இதை கூறினால் அது நடந்து முடிந்த கதை என்போம். எதற்காக வாய் பொத்தி நின்றார்கள். தங்களுடைய வாரிசுகளுக்கு தொழில் வாய்ப்பு வேணும் அல்லவா? அன்று தமிழ் ஈழம் எங்கே? இதற்கு சில அப்பிபிராயம்: ராஜ்ஜியங்களின் இணைப்பு குறிப்பிடத்தக்க சமூக மற்றும் கலாச்சார தாக்கங்களையும் கொண்டிருந்தது. இந்த ஒருங்கிணைப்பு பல்வேறு இன மற்றும் கலாச்சார குழுக்களை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஒன்றிணைத்தது. இந்த நடவடிக்கை ஒற்றுமை உணர்வை வளர்ப்பதையும், மோதலுக்கு வழிவகுக்கும் பிராந்திய பிளவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், புதிய மையப்படுத்தப்பட்ட ஆட்சி மற்றும் அதன் கொள்கைகளுக்கு வெவ்வேறு சமூகங்கள் ஒத்துப்போகும்போது பதட்டங்களுக்கும் இது வழிவகுத்தது.

2.       மாநில கவுன்சில் (State Council) காலத்தில் செல்வநாயகம் அங்கத்தவராக இருந்தார். அதன்பொழுது தமிழ் ஈழத்தையோ அல்லது மாநில அரசாட்சியை எதற்காக கேட்கவில்லை. பயம், வெள்ளையன் தண்டிப்பார் என்று. தமிழர் எல்லோரும் கொழும்பில்தான் வசித்தார்கள். நாகநாதன் இந்தியாவில் இருந்தான். சுதந்திரம் கிடைப்பதற்கு முன் இலங்கை வந்தான். அரசியலில் குதிப்பதற்கு. பாகிஸ்தானின் ஜின்னா பிரித்தானியரிடம் பிரிவினை கேட்டு பாகிஸ்தானை ஸ்தாபித்தான்.  எங்களுடைய அரசியல்வாதிகட்கு முதுகெலும்பு இல்லையோ?

3.       சுதந்திரம் கிடைத்ததும் பத்து லட்சம் இந்திய வம்சாதிகட்கு குடியுரிமையை பறிப்பதற்கு மூன்று அரசியல்வாதிகள் அரசாங்கத்தை ஆதரித்தார்கள். ௧) ஜி ஜி பொன்னம்பலம், (௨) மட்டு நல்லையா, (௩) வட்டுகோட்டை கனகரத்தினம்.

4.       அரசாங்கம் ஜி.ஜி பொன்னம்பலத்துக்கு மந்திரி பதவி கொடுத்தார்கள். இது செல்வநாயகத்திற்கு பிடிக்கவில்லை. ஆகவே அரசியலில் முந்துவதற்கு தமிழ் அரசியல் கட்சி என்றொரு கட்சியை ஸ்தாபித்தான். இது 1949 ம் ஆண்டு. அன்றிலிருந்து இன்று வரை போராட்டம். மக்களுக்கு விடிவில்லை முன்னேற்றம் இல்லை. அரசியல்வாதிகளின் சொந்தங்கள் முன்னேறினார்கள்.  

5.       அதன்பின் எத்தனை தமிழ் கட்சிகள்? எத்தனை பிரிவுகள்?

6.       தங்கத்துரை, குட்டிமணி ஆயுதப்போராட்டம். இவர்கள் இருவரும் கடத்தல்காரர்கள். அதன்பின் பிரபாகரன், உமா மகேஸ்வரன் இப்படி பலர். ஆனால், இவர்கள் ஒருவருக்கு ஒருவர் போராடினார்கள். அரசாங்கத்தோடு அல்ல. தங்களுக்குள்லேயே சுட்டுக்கொன்றார்கள். இப்போ கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன், சுகேஷ் கனகரத்தினம். புதித்காக வந்தவர் – வைத்தியர் அருச்சுனா ராமநாதன்.

7.       இதன்பின் இருபது லட்சம் தமிழ் மக்களுக்கு எத்தனை கட்சிகள், பிரிவினைகள், அப்பாடா?

8.       பொன்னம்பலம் ராமநாதன் காலத்தில் அவன் விருப்பம்- சாதி குறைந்தவருக்கு வாக்கு போட இடம் அளிக்கவேண்டாம், படிப்பு தேவையில்ல. அவர்கள் மிருகத்திற்கு சமன் என்று நினைத்தான். அவன் இரண்டாம் தாரமாக திருமணம் செய்தது ஒரு ஆங்கிலேய பெண்மணியை. பிள்ளைகள் எல்லோரும் அரசாங்க வேலை. அப்பாடா சொல்லத்தேவைஇல்லை.

9.       பின்பு 1956 ல் இருந்து போராட்டம்தான். ஆனால் ஆலய கோபுர வேலைகள் கட்டின படிதான். சாத் பிரிவினை அழியவில்லை. இப்போ புலம் பெயர்ந்த நாட்டினில் சாதிக்கேர்ரபடிதான் வாழ்கின்றார்கள். சாதி குறைந்தவர்களின் வீதிற்கு சென்றால் தங்களுக்கு மதிப்பில்லை என்று வாழ்கின்றார்கள்.

10.    தமிழ் ஈழம் என்ற பெயரிலும் புலிகள் என்ற பெயரிலும் ஒரு சிலர் பணம் சம்பாத்து பெரிய கோடிச்வரர்களாக மாறினார்கள். எல்லா இயக்கங்களிலும் பணம் சம்பாதிப்பது இப்போ இரு தொழில்.இப்போ துவாரகா என்ற பெயரில் பணம் சம்பாதிப்பு. இலங்கையில் இப்போ கௌரவமான தொழல் You Tube ல் பேசி பணம் சம்பாதிப்பது. இல்லையேல் ஒரு கடை போட்டு சம்பாதிப்பது. அபிவிருத்தி என்பது இல்லை.

11.    இன்றைய அரசாங்கம் மக்கள் அரசாங்கம். எது தேவை என்று மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற அரசாங்கம். லஞ்ச ஊழலை முழுதாக அழிக்கவேண்டுமென்று அரசாங்கம் முயற்சிக்கின்றது. மக்களும் அதற்கு உதவி போகவேண்டும். யாழில் இன்று போதை மதுபானம், செக்ஸ், கொலைகள், போட்டி பொறாமை இப்படி எல்லாமோ நடக்கின்றது. ஆனால் அரசியல்வாதிகள் இவைகளை கண்டும் காணாததுபோல வாழ்கின்றார்கள். தமிழனுக்கு ஒரு சோம்பேறி தொழில் என்றால் அரசியல், யுடுப், ஆர்பாட்டம், இப்படி எத்தனையோ. தமிழன் குணமே போட்டி பொறாமைதான்.

12.  நீதிக்கு இலக்கணம் இளஞ்செழியன். நேர்மைக்கு இலக்கணம் இளஞ்செழியன். கலாச்சார பராமரிப்புக்கு இளஞ்செழியன். பழம்பெரும் தமிழனுக்கு உதாரணம் இளஞ்செழியன். வரும் மாகாண சபை தேர்தலில் முதல் அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் இளஞ்செழியன் ஒருவர்தான். மக்கள் இனியாவது நேர்மை உள்ளவர் ஒருவரை மாகாண முதல் அமைச்சராக தேர்வு செய்வது அவசியம். பிழை விட்டால் தமிழ் இனம் அழிவது நிச்சயம். மற்றவர்கள் எல்லோரும் நேர்மை அற்றவர்கள். ஊழல்வாதிகள். தலைமைக்கு அவசியம் இளஞ்செழியன் ஒருவர்தான். நல்லதொரு தமிழ் இனமாக மாற்றுவார் இளஞ்செழியன்.

13.  கொலைகாரர்களை அரசியல்வாதிகளாக மாகான சபைக்கு அனுப்பாதீர்கள்.

 

 

 

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  04-04-2025 Engr. Kanthar Balanathan DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey)  Former Director of Power ...