வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனிடம் ஒரு வேண்டுகோள்.
சாவகச்சேரி
பிரச்சனையிலிருந்து தங்களை ஓர் நோக்குடன் அவதானித்து வருகின்றேன். அரசியலில்
குதிப்பதற்கு எத்தனை நாடகம் ஆடுநீர். அதோடு புலம் பெயர்ந்த நாடுகளிலும் வைத்தியர்மாரின்
நடத்தை முறையினை அவதானிக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் சங்கங்கள் என்றால்
வைத்தியர்மார்தான் தலைவர்மார். ஆனால் ஒரு சங்கங்களும் சரியாக செயல்படவில்லை.
பிரச்சனைதான். போட்டிக்கும் தலமைப்பதவிக்கும் வேறு சங்கங்களை அமைப்பார்கள். அதனால்தான் இன்று
உலகளாவில் பல சங்கங்களும் ஒன்ரியன்களும் உதித்திருக்கின்றன. கடந்த தேர்தலில் வட
மாகாணத்தில் ஆறு எலும்புத்துண்டுக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள்
குலைத்தன. இதிலிருந்து தெரியவில்லையா தமிழனின் குணம். இப்பொழுது புங்குடுதீவில்
கோடிக்கனக்கில் செலவழித்து ஓரு ஆலயம் கட்டுகின்றான் தமிழன். ஒரு நல்ல பகுத்தறிவுள்ள
படித்தவருக்கு என்ன தேவை. அதிலும் அரசியலில் குதிக்கு முன்னர் ஒருவர் இவைகளில்
தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். அவைகள்:
தனிப்பட்ட பண்புகள், ராஜதந்திரம், தந்திரோபாயம், புதுமையான, நெகிழ்வுத்தன்மை, படைப்பு, முன்முயர்ச்சி, முறையான, ஒழுங்கமைக்கபட்ட, தீர்க்கமான, சுய ஒழுக்கங்கொண்ட, பகுப்பாய்வு திறமை, இவைகள் யாவும் ஒருவர் தனிப்பட்ட திறமை கலச்சாரத்தில் ஒன்றி இருக்கவேண்டும்.
கவலையோடு தெரிவிக்கின்றேன்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியில் இருவர் இருக்கின்றார்கள். ௧) செல்வரஜா
கஜேந்திரன், ௨) சுகாஷ் கனகரத்தினம்.
இவர்கள் இருவரையும் வழி நடத்துபவர் திறமை மிக்க அனுபவம் மிக்க ஒருவர் அல்ல. சில
காலங்களுக்கு முன் இவர்கள் இருவரும் தெருவில் நின்று ஆர்பாட்டம் செய்வதுதான்
இவர்கள் வேலை. சட்டத்தரணிகள் மதிப்பே தெருவுக்கு வருகின்றது. தெருவில் நின்று
வருடம் முன்னுற்றி அறுபத்தைந்து நாட்களும் ஆர்பாட்டம் செய்வதுதான் ஜனநாயகமா? ஜனநாயகத்தை முதலில் முழுமையாக் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்கள்
வழியில் தாங்களும் வருவதுபோல தெரிகின்றது. தமிழ் மக்களின் தேவைகள் என்ன? ஜனநாயகம் என்னவென்று தெரியாதவர்கள் அரசியலுக்கு
வரக்கூடாது. ஒரு சிலர் நினைப்பதுபோல் வேலுப்பிள்ளை பிரபாகரன் திறமை கொண்டவர்
இல்லை. சீமானுக்கு பிரபாகரன் முருகனாக தெரியலாம். கொலை திறன் படைத்தவர்தான்
பிரபாகரன். தாங்கள் அரசியலில் குதிக்குமுன்னர் ஒரு குறிக்கோளோடுதான் குதித்தீரா? உமது தொலைநோக்குப்பார்வை என்ன? என்ன பணி. எதை சாதிக்க எண்ணம். இதை தெரியாமல்தான்
செல்வநாயகம் நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டு தமிழரசுக்கட்சியை ஸ்தாபித்து கடந்த எழுபத்தி
ஆறு வருடங்களை மக்கள் வன வாழ்க்கையாக மாறி இருக்கின்றது. ஒன்றை அடைவதற்கு வழி
அமைக்க வேண்டும். அது வன்முறை வழியல்ல. வட மாகாணத்தில் எத்தனையோ பிழைகள் நடந்தன, நடந்துகொண்டிருக்கின்றது. மக்கள் திருந்த வேண்டும்.
இன்றும் வட மாகாணத்தில் கொலைகள் நடக்கின்றன. போதைபோருட்கள் கடத்துகின்றனர்.
போதைபொருள் பாவிக்கின்றனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்ன செய்கின்றீர்.
அதுதான் உம்முடைய கடமை. இப்பொழுதே வடமாகான முதல் மந்திரியாக வரவேண்டுமென்று
குறுக்கு வழியில் வேலை செய்யக்குடாது. என்னுடைய பார்வையில் வாட மாகான முதல் மந்திரியாக
வருவதற்கு உமக்கு தகுதி இல்லை. (You are totally unfit to become the Chief Minister of the
NPC. You are politically
immatured).
நியூ சீலாந்தின் maori மக்கள் பாராளுமன்றத்தில் ஹக்கா நாட்டியம் ஆடுவார்கள். இது
போர் களத்தில் ஆடுவது. இலங்கை பராளுமன்றத்ஹில் ஸ்ரீதரன் தேவாரம் படிப்பார்.
(நாமாற்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்) இதற்கு அர்த்தம் என்ன? தமிழனுக்கும் மோரி குணமா?. ஒரு அரசியல்வாதியாக மக்களுக்கு தேவையானவற்றை
கொடுக்கவேண்டும். பிழையான வழியில் நடத்தலாகாது. அரசியல்வாதிகள் அரசியல் பேசவேண்டும். ரௌடிகளாக அல்ல.
நான் நாட்டை விட்டு வெளியேறி
ஐம்பது வருடங்களாகின்றது. வைராக்கியத்துடன் இன்றும் தமிழை மறவேன். அன்டன் பாலசிங்கம்
எனது நண்பர். பிரபாகரன் அன்டன் அபிப்பிராயத்தை கேட்பதில்லை. ஒற்றை புத்தி. எத்தனை
மக்களுக்கு அரசியல், சமூக
ஒருங்கினைபைப்பற்றி தெரியும். ஜனநாயகம் என்ன என்று கேட்டால் விடை சொல்வார்களா? வீதிக்கு வீதி ஆலயங்களை அமைப்பார்களா? இப்போ யாழில் என்ன இல்லை? முட்டை இல்லை என்கின்றோம். கோழி வளர்க்க
முன்வருகின்றார்களா? ஒரு கோபுர ஆலயம் கட்டுகின்ற பணத்தில் பல பெரிய கோழி பண்ணையே அமைக்கலாம்
அல்லவா? தயவு செய்து மக்களை
சரியான வழியில் வழி நடத்தவும். ரௌடிகளாக அல்ல. தாங்கள் இலங்கையில்தான் ஒரு அரசியல்வாதி.
வடமாகாணத்திற்கல்ல.
எனது நண்பர் ஒருவர் (அவுஸ்திரேலியா)
தனது பணத்தில் பல ஏக்கர் காணியில் வட மாகாணத்தில் விவசாயம் செய்கின்றார். அதோடு
அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்த பாடுபடுகின்றார். இப்படி எத்தனை தமிழர்
இருக்கின்றார்கள்.
நன்றி
சாண்டில்யன்
27-01-2025