இலங்கை வாழ் தமிழ் மக்கள் அபிலாசைகள்
1. இலங்கை வாழ்
தமிழ் மக்கள் அபிலாசைகள்; சந்திக்கு சந்தி ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன, கோபுரங்கள்
ஆகாயத்தை நோக்கி வளர்ந்து செல்கின்றது. கடவுள்களோ அதிகம். அம்மாளில் எத்தனை, பிள்ளையாரில்
எத்தனை, முருகனில் எத்தனை, நடராஜனில் எத்தனை? புலோம் பெயர் தமிழ் மக்களின் பணங்கள்
ஆலயங்கள் கட்டுவதில் செலவிடுகின்றன. சரி, இதுவரையில் இந்த ஆண்டவன், கடவுள்கள் எதாவது இலங்கை தமிழ்
மக்களுக்கு உதவி கொடுத்து இருக்கின்றாரா? இல்லையே! ஒருவர் வெளி நாட்டுக்கு சென்றால், அது கடவுள் அருள்
என்கின்றார்கள். இன்றைய நிலையில் தமிழ் மக்கள் வெளி நாட்டிலும் அதிக ஆலயங்களை
கட்டுகின்றார்கள். இலங்கையில் செலவழிக்கும் பணத்தை தங்கள் தங்கள் ஊரில் உள்ள
பாடசாலைகளுக்கு அபிவிரித்தி செய்ய செலவளிக்கலாம்தானே. லண்டனில், கனடாவினில்
முருகன் ஆலயம் கட்டினால், என்ன, முருகன் அங்கு புலம் பெயர்ந்து விட்டாரா? குளிர் நாடான
நோர்வேயிலும் முருகன் ஆலயம். புலம் பெயர்ந்த மக்கள் ஏன் வீட்டினில் கடவுளை வழிபட
ஏலாதா?
இதில் நகைப்பு என்ன வென்றால், இத்தனை ஆலயங்கள் எதற்க்காக? அது சாதி வெறியால். பக்கத்து ஊரில் கோபுரம் நாற்பது அடி
என்றால், எமது ஊரில் ஏண் அறுபது அடியில் கட்ட முடியாது? காரணம்? பெருமை, திமிர், பொறாமை.
அதோடு; நாகபாம்பு ஆலயத்திற்கு வந்தது. அதில் பெருமை. பிள்ளையார்
கண்ணிலிருந்து கண்ணீர் வடிகின்றது. இதுபணம் அபகரிப்பதற்காகவா? இதில் யார்
முட்டாள்கள்?
விஞ்ஞானத்தை வளர்க்க முடியாதோ? எத்தனை காலத்திற்கு கிணற்று தவளைகள் போல? வெளியில் வரலாமே?
2. வெளி நாட்டில்
இருக்கும் புலம் பெயர் மக்கள், யாழ் வந்து காணி விலையை ஏற்றி, கோடிக்கணக்கில்
செலவழித்து வீட்டைகட்டி பூட்டி வைத்துவிட்டு அதன் பின் வெளி நாட்டிற்கே
செல்கின்றார்கள். யாருக்கு இவர்கள் உதவி செய்கின்றார்கள். விற்பவனுக்கா, தமிழ் இனத்திற்கா?
3., நீதி, நேர்மை,
கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, என்று கத்தும் தமிழ் மக்களும், அரசியல் வாதிகளும், அதை
கடைப்பிடிக்கின்றார்களா? யாழில், எத்தனை, கற்பழிப்பு, கொலை, களவு, போதைபொருள் பாவிப்பு, அற்பத்தனம்? அப்பன் மகளை கற்பழிப்பதையும், கணவன், மனைவியின்
தங்கையை கற்பழிப்பது, ஊழல், லஞ்சம், அரச வைத்திய சாலைகளிலும் பொழுது போக்காகிவிட்டது.
எல்லாவற்றிற்கும் கூடி எதிர்ப்பு தெரிவிற்கும் எமது பெரியோர்கள், கடந்த
வித்தியா கற்பழிப்பு, கொலை இதை மறந்து விட்டார்களா? கொலைகாரர்கள் எங்கே? நீதி நீதிமன்றங்கள் இலங்கையில் உண்டா?
போதைப்பொருள் பாவிப்பு, மது, மாது அபிலாசை தமிழ் மக்கள் மத்தியில் கூடிவிட்டது. அதே
நேரத்தில் நெத்தியில் பட்டை அடித்து ஆலயத்திற்கு சென்று மறைத்து விடுவார்கள்.
எமது அரசியல் வாதிகள் அதிகமானோர் சட்டம் படித்தவர்கள். எதற்காக வித்தியா
கொலையை மறந்தார்கள்.
4.இப்படி கத்தும் தமிழ் மக்கள், அரசியல் கட்சி உருவாக்கி, அரசாங்கத்தில் பணம் பறிக்கும் குணம் மாறவில்லை.
5.வேலன் சுவாமிக்கு என்ன அரசியல்? மதம் சார்ந்த
விழிப்புணர்ச்சிகளை போதிக்கலாம்தானே? இவருக்கும் பணத்தாசை பிடித்து விட்டது.
தமிழ் மக்களை வாழ விடுங்கள். அழிக்காதீர்கள்.
தொடரும்
இப்படிக்கு
சாண்டில்யன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.